செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

வயசு ஆகிட்டே போகுது.. சினிமாவை தாண்டி சம்பாதிக்க புது ரூட்டு போட்ட நயன்தாரா

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் லயன் இப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். அட்லி இப்படத்தை இயக்கி வருகிறார். இவர்களது கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்தாமல் தள்ளி வைத்துள்ளனர்.

அதனால் நயன்தாரா தற்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் ஒரு சில படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நயன்தாரா நடித்து முடித்துள்ளார். அதனால் தற்போது டப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் நயன்தாரா தொழில் துறையில் கவனம் செலுத்த உள்ளார். அதாவது கதாநாயகிகள் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் அது யாராக இருந்தாலும் அதனால் நயன்தாரா தற்போது இருக்கும் மார்க்கெட் பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் காலப்போக்கில் நயன்தாராவிற்கு மார்க்கெட் இருக்குமா என்பது தெரியாது. ஏனென்றால் வரும் காலங்களில் ஏராளமான கதாநாயகிகள் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் தற்போது நயன்தாரா சினிமாவை தாண்டி தொழிலில் கவனம் செலுத்தி வருமானம் பெற திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே நயன்தாராவிற்கு சென்னையில் 50 டீ கடைகள் வைத்துள்ளார். தற்போது எண்ணெய் தொழில் செய்யவும் திட்டமிட்டுள்ளார். அதற்காக துபாயில் 100 கோடிக்கு எண்ணெய் தொழில் தொடங்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக பலரிடமும் பல்வேறு தகவல்களை சேகரித்து வருகிறார் நயன்தாரா அதனால் கூடிய விரைவில் எண்ணெய் தொழில் செய்ய உள்ளதாக தெரிகிறது.

நயன்தாரா இன்னும் சிறிது வருடங்கள் சினிமாவில் நடித்துவிட்டு அதன்பிறகு முழுநேரமாக தொழில் துறையில் கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளார். தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.அதனால் கூடியவிரைவில் நயன்தாரா அடுத்தடுத்து வெற்றி பெறுவார் என பலரும் கூறி வருகின்றனர்.

Trending News