தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், பத்திரிகையாளர் என பல முகங்களுடன் வலம் வரும் ஒரு நபர் என்றால் அவர் தான் பாக்யராஜ். இவர் பல படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். ஆனால் தற்போது வரை மக்கள் மத்தியில் இவர் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படம் தான் பிரபலமாக உள்ளது.
இப்படி தன்னை தானே செதுக்கி சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் திகழும் பாக்யராஜ் தமிழ் படங்களை கழுவி ஊற்றியுள்ளார். சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற பாக்யராஜ் பேசியதாவது, “கொரோனா வந்து சினிமாத்துறை கஷ்டப்படும்போது நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
ஆனால் சில படங்களை பார்க்கும்போது இந்த படங்களுக்கு கொரோனாவே மேல் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தற்போது மோசமான படங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற படங்களால் தமிழ் சினிமாவின் தரம் குறைந்து வருகிறது” என மிகவும் ஆதங்கமாக பேசியுள்ளார்.
ஆனால் பாக்யராஜ் கூறும் அந்த சில படங்கள் எது என்று தான் புரியவில்லை. ஒருவேளை இருட்டு அறையில் முரட்டு குத்து, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற அடல்ட் படங்களை தான் கூறுகிறாரோ? அப்படி என்றால் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனு தானே நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாக்யராஜும் அந்த படத்தில் நடித்துள்ளாரே.
அப்படி என்றால் அது மட்டும் நல்ல படமா? இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான படமா என சக இயக்குனர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர்களின் கேள்வியும் நியாயம் தான் முருங்கைக்காய் சிப்ஸ் படம் வெறும் முதலிரவு காட்சியை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட படம்.
இந்த படத்தை குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? பாக்யராஜ் பேசுவதற்கு முன்பு கொஞ்சம் யோசித்திருக்கலாம் என சிலர் விமர்சித்து வருகிறார்கள். அவ்வளவு அருவருப்பான காட்சிகளை வைத்து நடிப்பதற்கு முன்னதாக சாந்தனுவுக்கு முதலில் பாடம் எடுக்கும் படி கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.