தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பையும் தாண்டி சமூக பிரச்சினைகளுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுக்க கூடியவர். இதனால் பல அரசியல் கட்சிகளையும் விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தற்போது பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் பற்றி கருத்து தெரிவித்து வம்பில் சிக்கியுள்ளார்.
பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு காரணமாக தன் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு திரும்பினார். மேலும் ஏர்போட் வந்த மோடி நான் உயிருடன் விமான நிலையம் வந்ததற்கு உங்கள் பிரதமருக்கு நன்றி கூறினேன் என்று சொல்லுங்கள் என பாதுகாவலரிடம் கூறினார். இந்த செய்தி பெரும் விவாதமாக மாறியது. நாட்டை ஆளும் பிரதமருக்கு இங்கு பாதுகாப்பு இல்லையா என்று பல கண்டனங்கள் எழுந்தன.
இதற்கு பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்தார். பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் ஏற்பட்டால் எந்த நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது. பிரதமர் மீது இப்படி தாக்குதலை ஏற்படுத்தியதற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
சாய்னாவின் இந்த கருத்துக்கு நடிகர் சித்தார்த் கமெண்ட் செய்திருந்தார். உலகின் நுட்பமான சேவல் சாம்பியன், கடவுளுக்கு நன்றி, எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர். உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன் என்று பதிலளித்திருந்தார். மேலும் subtle cock என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார்.
சித்தார்த்தின் இந்த ட்வீட் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஆபாசமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் பல கண்டனங்கள் எழுந்தன. இதனால் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பினர். இது குறித்து பேசிய சாய்னா நேவால் அவர் எந்த அர்த்தத்தில் அப்படி கூறினார் என்று எனக்கு தெரியவில்லை.
அவர் கண்ணியமான வார்த்தைகளால் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்க முடியும். ஆனால் இது நன்றாக இல்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் சாய்னாவின் கணவர் மற்றும் தந்தையும் சித்தார்த்துக்கு எதிராக தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர்.
ஒருவருக்கு தன் கருத்தை சொல்லும் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எந்த வார்த்தைகளை வேண்டுமானாலும் உபயோகிப்பது நிச்சயம் நாகரீகம் இல்லை என்று பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் சித்தார்த் தன்னுடைய இந்த கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை cock & bull என்பதில் இருந்து தான் நான் அவ்வாறு குறிப்பிட்டேன். யாரையும் ஆபாசமாக, அவமரியாதையாக பேச வேண்டும் என்ற உள் நோக்கம் எனக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளார். தன் கருத்துக்கு அவர் விளக்கம் அளித்திருந்தாலும் சித்தார்த்துக்கு எதிரான கண்டனங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மிகக்கடுமையான எதிர்ப்புகள் வந்ததால் சித்தார்த் சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த இந்த லெட்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.