சமீபகாலமாகவே தமிழ் படங்களுக்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அதன்படி படத்தின் பாடல், காட்சிகள் அல்லது வசனங்கள் சர்ச்சைக்குரியதாக உள்ளது என கூறி ஏதேனும் ஒரு பிரச்சனையை முன்வைத்து அந்த படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி விடுகிறார்கள்.
இந்த வரிசையில் நடிகர் அஜித்தின் வலிமை படமும் இணைந்திருக்கும். நல்லவேளை ஒரு நூலிழையில் வலிமை படம் தப்பி விட்டது. ஆமாங்க வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் தான் வலிமை. இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளி சென்றுள்ளது.
இருப்பினும் படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று விட்டது. இந்நிலையில் வலிமை படத்தில் இடம்பெற்றிருந்த வசனம் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி “கடவுள் கூட நிஜ சாத்தான் தான்” என்ற வசனம் இடம்பெற்றிருந்ததாம். ஆனால் சென்சாரில் இந்த வசனத்தை தூக்கி விட்டார்களாம்.
நல்லவேளையாக வசனத்தை தூக்கி விட்டார்கள். இல்லையெனில் அவ்வளவு தான் இந்த படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும். சமீபத்தில் கூட நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாக கூறி மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது.
இறுதியில் இந்த எதிர்ப்பு தான் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பார்த்தால் வலிமை படத்திற்கு எதிர்ப்பு என்ற பெயரில் இலவச விளம்பரம் கிடைத்திருக்கும். ஆனால் தற்போது அது நடக்காமல் போய்விட்டது அவ்வளவு தான்.
இருப்பினும் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அஜித் படம் எதுவும் வராததால் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது தான் என ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்த டயலாக்கோட படம் வெளிவந்திருந்தால் கண்டிப்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு கலவரமே உண்டாகி இருக்கும்.