தமிழ் சினிமாவில் சில முக்கியமான படங்களை நடிகைகள் தவறவிட்டுள்ளார்கள். ஒரு நடிகை ஒரு படத்தில் ஒப்பந்தமாகி சில காரணங்களால் வேறு ஒருவர் நடிப்பது சினிமாவில் புதிதல்ல. அந்த வகையில் சில படங்களில் ஒப்பந்தமாகி அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாத நடிகைகளை பார்க்கலாம்.
நதியா : திரிஷ்யம் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் தான் பாபநாசம். கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்து இருந்தார்கள். பாபநாசம் படத்தில் த்ரிஷ்யம் படத்தில் நடித்த மீனாவை நடிக்க வைக்கலாம் என்றால் சலிப்பு தட்டிவிடும் என்பதால் நடிகை நதியாவை தேர்வு செய்தார்கள். கமலுடன் நடிக்க நதியா மறுத்ததால் அந்த கதாபாத்திரத்தில் கௌதமி நடித்தார்.
பாவனா : மலையாள படமான பாடிகார்டின் ரீமேக் காவலன் படம். விஜய், அசின், ராஜ்கிரண், வடிவேலு ஆகியோர் இப்படத்தில் நடித்து இருந்தார்கள். காவலன் படத்தில் அசினுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்ததோ அதே அளவுக்கு அவருடைய தோழியாக நடித்த மித்ரா குரியன் என்பவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் முதலில் இந்த வாய்ப்பு பாவனாவுக்கு கிடைத்தது. சில காரணங்களால் இப்படத்தில் பாவனா நடிக்கவில்லை.
ஸ்ருதி ஹாசன் : நடிகர் சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் சிங்கம். ஹரி இயக்கத்தில் உருவான சிங்கம் படத்தில் அனுஷ்கா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்தது. பின்பு ஒரு சில காரணங்களால் ஸ்ருதியால் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு சிங்கம்-3 படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.
சமந்தா: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2015-ல் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். கௌதம் மேனன் பணியாற்றிய நடிகைகளில் சமந்தா மூன்று மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் என்பதால் கௌதம் மேனனுக்கு சமந்தாவை பிடிக்கும். இதனால் என்னை அறிந்தால் படத்தில் ஹேமானிகா கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா ஒப்பந்தம் ஆகியிருந்தார். சில காரணங்களால் சமந்தா நடிக்க முடியாமல் போக திரிஷா அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
ஸ்ரேயா : சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்த படம் 23ஆம் புலிகேசி. சிவாஜியில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா இந்தப் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி பின்பு விலகி விட்டார். ஆனால் வடிவேலு நடிப்பில் வெளியான இந்திரலோகத்தில் நான் அழகப்பன் படத்தில் ஸ்ரேயா வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.