சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியின் பிக் பாஸ். இந்நிகழ்ச்சி கடந்த நான்கு சீசன்களை தாண்டி தற்போது ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று மாலை விஜய் டிவியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாக உள்ளது. இதில் ராஜு, பிரியங்கா, பவானி ரெட்டி, அமீர், நிரூப் ஆகிய ஐவரும் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
விஜய் டிவி ஒவ்வொரு சீசன் பிக்பாஸிலும் ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கும். அது போன்று இந்த சீசனிலும் விஜய் டிவி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த நான்காவது சீசன் பிக்பாஸ் டைட்டிலை மக்களின் ஆதரவோடு நடிகர் ஆரி வென்றார்.
அந்த வகையில் இந்த சீசனின் பைனல் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி தான் டைட்டில் வின்னர் பெறப்போகும் அந்த கோப்பையை இறுதி போட்டிக்கு தேர்வான போட்டியாளர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கடந்த அனைத்து சீசன்களிலும் இதுதான் நடந்தது.
ஆனால் இந்த முறை விஜய் டிவி நடிகர் ஆரியை இறுதிப்போட்டிக்கு அழைக்கவில்லை. கடந்த சீசனில் ஏராளமான மக்களின் இதயங்களை வென்ற ஒரே போட்டியாளர் என்றால் அது ஆரி மட்டும்தான். அவருடைய அந்த நேர்மையான குணம் ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்தது.
இதன் காரணமாகவே அவர் பிக் பாஸ் வீட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் நடந்த போதும் மக்களால் அதிக ஓட்டுக்களை பெற்று பிக் பாஸ் வின்னராக டைட்டிலை வென்றார். தற்போது விஜய் டிவி இந்த இறுதிப் போட்டிக்கு ஆரியை மதிக்காமல் நடந்து கொண்டது ஆரியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.