செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லைலாவுக்கு அந்த நடிகர் மேல லவ் வந்துச்சாம்.. 41 வயதில் வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது!

தமிழ் சினிமாவிற்கு கேப்டன் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தென்னிந்திய நடிகை லைலா, அதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களான சூர்யா, அஜித், விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து சூப்பர்ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

குறிப்பாக இவர் நடித்த தீனா, தில், மௌனம் பேசியதே போன்ற படங்கள் நடிகை லைலாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன்பிறகு லைலா கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்து விட்டார். திருமணத்திற்கு பிறகு லைலாவை இரண்டு நாடக கம்பெனி நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினாலும் கண்டிப்பாக நடிக்க முடியாது என்று சினிமாவிற்கு முழுமையாக முழுக்குப் போட்டுவிட்டார்

இன்னிலையில் தற்போது 41 வயதான லைலாவிற்கு இன்று வரை ஏகப்பட்ட புரோபோசல் வந்து குவிகிறதாம். ஆனால் அவர் லவ் ப்ரொபோஸ் பண்ண நினைத்த நடிகர் சூர்யாவாம். சூர்யாவின் மீது லைலாவிற்கு கிரஸ் ஏற்பட்டதாம்.

ஆனால் சூர்யாவின் காதலியும் தற்போதைய மனைவியுமான ஜோதிகா கோபப்படுவார் என்பதால் ஒதுங்கி விட்டாராம். ஏற்கனவே லைலா சூர்யாவுடன் நந்தா, பிதாமகன், மௌனம் பேசியதே, உன்னை நினைத்து உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ஜோதிகா சூர்யா திருமணம் ஆகவில்லை என்றால் லைலா சூர்யா இருவருக்கும் திருமணம் ஆக அதிக வாய்ப்பு இருந்திருக்கும். ஆகையால் லைலாவின் மறைக்கப்பட்ட காதல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது

Trending News