சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விவாகரத்துக்கு காரணமே அந்த சந்தேகம்தான்.. ஐஸ்வர்யாவும் சாதாரண ஆள் இல்ல போலயே

தனுஷ், ஐஸ்வர்யா இடையே ஆன 18 வருட திருமண பந்தத்தில் என்னதான் ஆனது என பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றவாறு கற்பனை செய்து பதிவிட்டு வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற அந்தஸ்தில் உள்ள தனுஷ், ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய என்ன தான் காரணம். தனுஷ் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் பல விமர்சனங்களுக்குப் பிறகு கடுமையான உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்துள்ளார். இவருடைய திரைப்படங்களில் நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அதிகமாக இடம் பெறத் தொடங்கியது.

இதனால் தனுஷ் பல நடிகைகள் உடன் சேர்ந்து இருப்பதாக கிசுகிசுக்கள் வரத்தொடங்கியது. ஆரம்பத்தில் சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களுடன் கிசுகிசு வருவது சாதாரணம் என ஐஸ்வர்யா நினைத்தார். அதன்பிறகு ஒரு நடிகையுடன் அதிக கிசுகிசு வர தொடங்கியதும் ஐஸ்வர்யாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதை தனுஷிடம் நேரடியாக கேட்டால் பிரச்சனை வரும் என்பதால் ஐஸ்வர்யா அந்த நடிகையிடம் கோபமாக கிசுகிசு செய்தியை பற்றி கேட்டுள்ளார். அந்த நடிகையோ ஐஸ்வர்யாவைப் பற்றி எக்கச்சக்கமாக தனுஷிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் என்னைப் பற்றி மற்றவர்களிடம் கேட்பியா என ஐஸ்வர்யாவிடம் கோபித்துக் கொண்டாராம். சில சமயங்களில் ஐஸ்வர்யா போன் செய்தாலும் அதை எடுக்காமல் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவாராம். இதனால் போயஸ் கார்டனில் தனி வீட்டில் தனுஷ் மட்டும் வசித்து வந்தாராம்.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா விவாகரத்திற்கு பிறகும் மன உளைச்சலில் இருந்த ரஜினி சௌந்தர்யாவுக்கு மீண்டும் திருமணம் ஆன பிறகு சற்று நிம்மதியாக இருந்தார். இதனால் தனுஷ், ஐஸ்வர்யா பிரச்சினை தெரிந்ததும் ஐஸ்வர்யாவை பொறுமையாக போக சொல்லி இருக்கிறார் ரஜினி.

அதனால் இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த ஐஸ்வர்யா குழந்தைகள் வளர்ந்த உடன் தற்போது விவாகரத்து செய்யப்போவதாக முடிவு எடுத்துள்ளார். அதேபோல் தனுஷ் குடும்பத்திற்கும் விவகாரத்து என்பது புதிதல்ல.

அவருடைய அண்ணன் இயக்குனர் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்தார். அதன்பிறகு அவருடன் பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இதனால் தனுஷூம் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய சம்மதித்து விட்டார்.

Trending News