வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

39 வயதில் ஆன்ட்டி மாதிரி இருந்த மீரா ஜாஸ்மின்.. இப்ப வேற மாதிரி மாடலா இருக்கும் புகைப்படம்

ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதிலும் இச்சுதா இச்சுதா பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது. அதன்பிறகு மீரா ஜாஸ்மினுக்கு ஏகப்பட்ட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்தி பல படங்களில் நடித்தார்.

மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் இவரது திரை வாழ்க்கையில் முக்கிய படம் என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் மூலம்தான் மீரா ஜாஸ்மினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். தனது துறுதுறுப்பான நடிப்பு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அதன்பிறகு மீரா ஜாஸ்மினுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தாலும் இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதனால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

meera jasmine
meera jasmine

தற்போது மீராஜாஸ்மின் கதைக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடித்து வருகிறார். மகள் எனும் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை கூடிய விரைவில் திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது மீரா ஜாஸ்மினுக்கு 39 வயது ஆகியும் இளமையாக இருக்கிறார். மேலும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீரா ஜாஸ்மின் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

Trending News