தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை கீதா. கல்யாணமாலை என்ற பாடல் மூலம் தற்போது வரை ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக தற்போது வரை வளம் வருபவர் அந்த நடிகர். நாடகத்தின் பின்னணியிலிருந்து வந்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி கன்னட தொடர்களில் நடித்தார். சின்னத்திரையில் இருந்து கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தவர் பிரகாஷ்ராஜ்.
பிரகாஷ்ராஜும், கீதாவும் மிகவும் பரிச்சயமானவர்கள். ஏனென்றால் இவர்கள் இருவருமே பெங்களூரை சேர்ந்தவர்கள். அப்போது தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த கீதா பிரகாஷ்ராஜை நல்ல நடிகர் என்று இயக்குநர் கே பாலச்சந்தர் இடம் அறிமுகம் செய்துள்ளார்.
இதனால் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான டூயட் படத்தின் மூலம் பிரகாஷ்ராஜை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். இப்படத்தில் ஆணாதிக்க மனநிலை கொண்ட மனிதராக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் பிரகாஷ்ராஜுக்கு பழமொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
பிரகாஷ்ராஜின் நிஜப் பெயர் பிரகாஷ் ராய். இயக்குனர் கே பாலச்சந்தரின் ஆலோசனைப்படி குடும்பப் பெயரான ராய் என்பதை நீக்கி பிரகாஷ்ராஜ் என மாற்றிக் கொண்டார். தற்போதும் பிரகாஷ்ராஜை கர்நாடக மாநிலத்தில் பிரகாஷ் ராய் என்றே அழைக்கப்படுகிறார்கள்.
கே பாலச்சந்தர் பல பிரபலங்களை அறிமுகபடுத்தியதில் தவிர்க்க முடியாத நபர் பிரகாஷ்ராஜ். ஆரம்பத்தில் நேர்மறை கதாபாத்திரத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கு வில்லன் கதாபாத்திரம் மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. தற்போது வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், கௌரவ வேடங்களில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், அரசியல்வாதி என பன்முகத் திறமை கொண்டவராக திகழ்ந்துள்ளார். இதைத் தவிர அவர் நடிப்பிற்காக 5 தேசிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட பிரகாஷ்ராஜ் எல்லையற்ற மொழிகளைக் கடந்த தற்போது எட்ட முடியாத உயரத்தில் உள்ளார்.