குத்தாட்டத்தால் சமந்தாவிற்கு அடித்த ஜாக்பாட்.. எதைப் பார்த்து மயங்கினார்கள் தெரியுமா.?

பொதுவாக சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் எந்தவொரு நடிகையும், ஐட்டம் பாடலுக்கோ அல்லது ஒரே ஒரு பாடலுக்கோ நடனமாட ஒப்புக்கொள்ள மாட்டார். ஏனெனில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினால் மார்க்கெட் குறைந்து விடும் அல்லது தொடர்ந்து ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாட அழைப்பார்கள் என்ற பயத்தால் எந்த நடிகையும் இதற்கு சம்மதிக்க மாட்டார்.

ஆனால் இதை மிகவும் தைரியமாக ஏற்று கொண்ட டாப் நடிகை சமந்தா முதன் முறையாக புஷ்பா படத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். பிற நடிகைகள் நினைத்ததைவிட எதிர்மறையாக இந்த பாடல் பயங்கர ஹிட்டானது. யாரும் எதிர்பாராத வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த பாடலை கொண்டாட தொடங்கி விட்டார்கள்.

தற்போது இந்த பாடலால் சமந்தாவின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது. அதுமட்டுமல்ல இந்த ஒரு பாடலுக்காக சமந்தா 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர இந்த பாடல் காரணமாக சமந்தாவிற்கு தற்போது ஹிந்தி பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

ஏற்கனவே பேமிலி 2 வெப் தொடரில் சமந்தாவின் நடிப்பை பார்த்து பலரும் மிரண்டு போனார்கள். இந்நிலையில் ஊ சொல்றியா பாடலில் இவரின் ஆட்டத்தை கண்டு குஷியான பாலிவுட் இயக்குனர்கள் சமந்தாவை அவர்களின் படங்களில் ஒப்பந்தம் செய்ய வரிசையில் நிற்கிறார்களாம்.

அந்த வகையில் சமந்தா தற்போது பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தடுத்து மூன்று படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். மேலும் தனது சம்பளத்தையும் 5 கோடியாக உயர்த்தி விட்டாராம். சமந்தா என்றால் எவ்வளவு சம்பளம் என்றாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம்.

இதனால் தற்போது சமந்தா மகிழ்ச்சியில் உள்ளார் மேலும் அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்கும் அதிகப்படியான சம்பளம் வாங்க திட்டமிட்டுள்ளார். இதனால் ஒரு சில தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் சமந்தா நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.