செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

உறியடி இயக்குனரின் அடுத்த சம்பவம் செய்யும் படம்.. ஆனா அதுல ஒரே ஒரு குறை இருக்கு

சாதித் தலைவர்களின் அரசியல் வேட்டையும், சுயநலத்தையும் வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஒரு இளம் இயக்குனர் இறங்கியிருந்தார். அந்த முயற்சியில் முதல் படத்திலேயே வெற்றி கண்டுவிட்டார். இதுபோன்ற சமூகம் மீது அக்கறை கொண்ட படங்களை சில இயக்குனர்கள் துணிச்சலாக எடுக்கின்றனர்.

அவ்வாறு தமிழ் சினிமாவில் உறியடி படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமானவர் விஜயகுமார். இப்படத்தை தொடர்ந்து உறியடி இரண்டாம் பாகத்தை இயக்கி, நடித்திருந்தார். உறியடி 2 படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

உறியடி படத்திற்கு பிறகு இயக்குவதை நிறுத்திவிட்டு நிறைய படங்களுக்கு வசனம் எழுதி வருகிறார். உறியடி 2 படத்தை தயாரித்த சூர்யா தனது சூரரைப்போற்று படத்தில் விஜயகுமாரை வசனம் எழுத சூர்யா கேட்டிருந்தார்.

அதற்கு சம்மதம் தெரிவித்து சூரரைப்போற்று படத்தில் விஜயகுமார் வசனம் எழுதி இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற வானம் என்ன அவன் அப்ப வீட்டு சொத்தா என்ற வசனத்தை விஜயகுமார் தான் எழுதி இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பல வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது விஜயகுமார் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குநர் அப்பாஸ் இயக்கத்தில் ரீல் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜயகுமார் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இயக்குனர் அப்பாஸ் உறியடி மற்றும் உறியடி 2 படத்தில் விஜயகுமாருக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இப்படத்தில் விஜய் குமாருக்கு ஜோடியாக அர்ஷா எனும் நடிகை அறிமுகமாக உள்ளார். இவர்களை தொடர்ந்து சங்கர் தாஸ், அவினாஷ், கார்த்திகேயன் ஆகியோரும் உள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

Trending News