தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு இணையான ரசிகர்களைப் பெற்றவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. தற்போது புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான பஞ்ச் டயலாக்குகள் பழைய படங்களில் கவுண்டமணி பேசிய வசனங்கள் தான் இருக்கும். ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவையில் தன்னுடைய ஆளுமையை காட்டிய கவுண்டமணி சில படங்களில் ஹீரோவை ஓரம் கட்டி உள்ளார்.
முறை மாமன்: சுந்தர் சி இயக்கத்தில் ஜெயராமன், குஷ்பூ, கவுண்டமணி நடிப்பில் வெளியான திரைப்படம் முறைமாமன். இப்படத்தில் ஜெயராமுக்கு அண்ணனாக கவுண்டமணி நடித்து இருந்தார். முழுநீள நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டிருந்த முறைமாமன் படத்தில் கவுண்டமணியின் கவுண்டர்களால் ஜெயராமனை பல இடங்களில் மறக்கச் செய்தது.
உள்ளத்தை அள்ளித்தா: சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி நடிப்பில் வெளியான திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. கவுண்டமணி இப்படத்தில் தி கிரேட் வாசுவாகா நடித்திருந்தார். ஆரம்பத்தில் இப்படத்தில் மோசடியான ஆளாக இருந்தாலும் கார்த்தியுடன் நட்பாக பழகுகிறார். ட்ரெயினுக்கு எல்லாம் 4 வழி வச்சிருக்காங்க, பஸ்சுக்கு 2 வழிதான் வச்சிருக்காங்க, என்ன ஸ்டேட் கவர்மென்ட், என்ன சென்ட்ரல் கவர்மென்ட் என்ற வசனம் அல்டிமேட்.
மேட்டுக்குடி: உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்சி இயக்கத்தில் கார்த்திக், நக்மா, கவுண்டமணி நடிப்பில் வெளியான திரைப்படம் மேட்டுக்குடி. இப்படத்தில் மற்றொரு கதாநாயகன் என்று கவுண்டமணியை சொல்லலாம். இப்படத்தில் இவர் திரையில் தோன்றும் போதெல்லாம் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
லக்கி மேன்: பிரதாப் போத்தன் இயக்கத்தில் கார்த்தி, சங்கவி, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் வெளியான திரைப்படம் லக்கி மேன். கார்த்தியின் அம்மாவின் உயிரை எடுப்பதற்காக பூலோகத்தில் இருந்து கீழே வந்திருக்கும் எமதர்மன் ஆக கவுண்டமணி நடித்திருந்தார். இப்படத்தில் கார்த்திக்கை விட கவுண்டமணியின் நடிப்பு ஒரு படி மேலாகவே இருந்தது.
ஜென்டில்மேன்: ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி நடிப்பில் வெளியான படம் ஜென்டில்மேன். ஆரம்பத்திலிருந்து இப்படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடி அல்டிமேட் ஆக இருக்கும். இப்படத்தில் அர்ஜூனுக்கு இணையான சென்டிமென்ட் காட்சிகளிலும் அசத்தியிருந்தார் கவுண்டமணி.
மன்னன்: பி வாசு இயக்கத்தில் ரஜினி, குஷ்பூ, விஜயசாந்தி, கவுண்டமணி, மனோரமா நடிப்பில் வெளியான திரைப்படம் மன்னன். மன்னன் படத்தில் சின்னத்தம்பி படத்திற்கும் கிடைக்கும் பரிசை வாங்க இவர்கள் இருவரும் தியேட்டரில் செய்யும் கலாட்டா என பல நகைச்சுவைகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்படத்தில் கவுண்டமணியின் பல நகைச்சுவை காட்சிகளில் ரஜினியால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லையாம். அந்தளவுக்கு கவுண்டமணி டைமிங்கில் காமெடி செய்யக்கூடியவர்.