தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தான் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றனர். அதற்குக் காரணம் அவர்களின் தனித்துவமான நடிப்பும் வசன உச்சரிப்பும் தான். அப்படி சினிமா துறையில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் தேங்காய் சீனிவாசன்.
ஆரம்பத்தில் தேங்காய் சீனிவாசன் நகைச்சுவையான கதாபாத்திரங்கள் தான் அதிகம் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்தி பல படங்களில் நடித்து சினிமாவில் தனி இடம் பிடித்தார். அதன்பிறகு அவருடைய தனித்துவமான நடிப்பை பார்த்து முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களும் கொடுக்கப்பட்டது. அதிலும் இவர் தனது திறமையை நிரூபித்தார்.
தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தை தற்போது வரை எந்த ஒரு நடிகராலும் நிரப்ப முடியாது. அந்த அளவிற்கு தான் நடித்த படங்களில் தேங்காய் சீனிவாசன் வாழ்ந்திருப்பார். அதிலும் காட்சிக்கு காட்சி தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தில்லு முல்லு படத்தில் இவர் நடித்த காட்சிகள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேங்காய் சீனிவாசன் சினிமா வருவதற்கு முன்பு நாடகத்துறையில் நடித்துள்ளார். அப்போது இவருக்கு கல் மனம் எனும் நாடகத்தில் தேங்காய் விற்கும் வியாபாரியாக நடித்திருப்பார். இந்த நாடகம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
பின்பு வெற்றியை கொண்டாடும் விதமாக மேடையில் தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தை பற்றி காமெடி நடிகர் தங்கவேலு புகழ்ந்து பேசினார். ஒரு கட்டத்திற்கு பிறகு மேடையிலேயே தேங்காய் சீனிவாசன் என அழைத்தார்.
பின்பு நாளடைவில் சீனிவாசனுக்கு தேங்காய் சீனிவாசன் என்ற பெயர் கிடைத்தது. அதன் பிறகு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து இவரை பலரும் தேங்காய் சீனிவாசன் என அழைக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு தேங்காய் சீனிவாசன் சினிமாவில் பெரிய அளவில் வலம் வந்தார்.