விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் 5 சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இதில் கலந்து கொண்ட ராஜு , ரசிகர்களின் மனதை வென்று டைட்டிலை தட்டிச் சென்றார். அவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடித்தார்.
இந்து சீசனில் கன்டஸ்டன்டுக்கு அடுத்தபடியாக ரசிகர்கள் மனதில் நிற்பது, பிக் பாஸ் குரலுக்கு பின்னணி பேசிய சாஷோ. அவர் குரலில் இருக்கும் ஆதிக்கம் மொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டது.
இந்த சீசன் மட்டுமல்லாது இதுவரை நடைபெற்ற மொத்த 5 சீசனிற்கும் குரல் கொடுத்தவர் சாஷோ. இவர் வேற எந்த நிகழ்ச்சிற்கோ அல்லது படத்திற்கோ இதுவரை குரல் கொடுத்தது இல்லை.
இந்த சீசனில் குரல் கொடுத்ததற்காக இவர் வாங்கிய சம்பளம் தற்போது வெளிவந்துள்ளது. இவருக்கு இந்த சீசனில் மட்டும் பதினேழரை லட்ச ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளனர்.
100 நாட்கள் சேர்த்து சாஷோவுக்கு இந்த சம்பளம் வழங்கப்பட்டது. அந்த வகையில் அவருக்கு மாதம் 5 லட்சம் சம்பளம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.