விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் சின்ன மளிகைக் கடையின் மூலம் தங்களது தொழிலைத் துவங்கி, தற்போது டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஆக மாற்ற வேண்டும் என்ற கனவை நினைவாக்க கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாக தற்போது புது பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் புதிதாக துவங்க உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் சரியான அப்ரூவல் எதுவும் வாங்காமல் கடை கட்டியதாக மாநகராட்சி அதிகாரிகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் கட்டி உள்ள டிபார்ட்மெண்ட் கடையை இழுத்து மூடி சீல் வைக்கின்றனர்.
எனவே அந்த இடத்திற்கு வந்த ஜீவா மற்றும் கதிர் இருவரும் பதற்றத்துடன் மாநகராட்சி அதிகாரிகளிடம் எதற்காக சீல் வைக்கிறீர்கள் என்று ஆதங்கத்துடன் கேள்வி கேட்கின்றனர். சரியான ஆவணம் இல்லாததால் டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு சீல் வைப்பதாக அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு அடுத்தடுத்த பிரச்சினைகள் வந்தாலும் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒற்றுமையுடன் அதனை எதிர்கொண்டு சரி செய்து விடுவார்கள். ஏற்கனவே முல்லை-கதிர் இருவருக்கும் குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை கதிர் மட்டும் அறிந்துள்ள நிலையில் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது.
ஆகையால் இன்னும் மூன்று நாட்களில் கடைத் திறப்பு விழாவிற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்கு, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சீல் வைத்திருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது. இருப்பினும் இதையெல்லாம் ஜீவா மற்றும் கதிர் விரைந்து சரி செய்து கடை திறப்பு விழாவை கோலாகலமாக நடத்த போகின்றனர்.
‘புயலுக்குப் பின் அமைதி’ என்பதற்கேற்ப ஏதாவது ஒரு நல்லது நடக்கப் போகிறது என்றால் சீரியலில் அதற்கு முன்பு பிரலயம் கிளம்புவது வழக்கம்தான். அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த சலசலப்புக்கு பிறகு கடைத் திறப்பு விழாவிற்கான கோலாகலமான கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது.