வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கோயம்புத்தூர் பொண்ணு அதுல்யாவா இது? இறுக்கமான உடைகள் ஹாலிவுட் ஹீரோயின் போல இருக்காங்க!

சினிமாவிற்குள் நுழைந்த ஒருசில வருடத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்த கோயம்புத்தூரை சேர்ந்த தமிழ் பேசும் நடிகை அதுல்யா ரவி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தனது சொந்தப் பெயர் கதாபாத்திரம் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானவர்.

இந்தப் படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவினாலும் படத்தைப் பற்றி தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது வலைதளத்தில் சிறிய முதலீடு எடுக்கப்பட்ட நல்ல திரைப்படம் என்ற கருத்தை வெளியிட்டது. அத்துடன் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் அதுல்யா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கதிகலங்கச் செய்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை இறுக்கமாக ஒயிட் வித் ப்ளூ பான்ட் அணிந்தபடி ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இதில் அதுல்யா செம ஹாட் லுக்கில் உள்ளார்.

actress-athulya-cinemapettai
actress-athulya-cinemapettai

எனவே இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் எக்கச்சக்கமான லைக்குகளையும் கமெண்ட்களையும் தட்டி விடுகின்றனர். மேலும் அதுல்யா நடிப்பில் தேவதாஸ் பார்வதி, வட்டம், எண்ணித் துணிக, கடவர் ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் ஆக தயாராகிக்கொண்டிருக்கிறது.

athulya-cinemapettai
athulya-cinemapettai

ஆரம்ப காலத்தில் ஹோம்லி லுக்கில் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து கொண்டு இருந்த அதுல்யா, தற்போது கிளாமர் ரோலில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த முருங்கக்காய் சிப்ஸ் திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் சமூக வலைதளங்களில் அதுல்யாவிற்கு கிடைக்கும் ஆதரவு, அவர் நடித்த படங்களுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் முன்னணி நடிகையாக மாறும் முயற்சியில் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

Trending News