தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகமான பயில்வான் ரங்கநாதன் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். தற்போது யூடியூப் சேனல் ஒன்றில் சினிமா வட்டாரத்தில் உள்ள பிரபலங்களை பற்றி பாதி உண்மை பேசி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பேசி வருகிறார். இதனாலேயே இவரது வீடியோக்கள் மிகவும் பிரபலமாக இருக்கிறது. பயில்வான் ரங்கநாதனின் இந்த செயலுக்கு சினிமா வட்டாரத்தில் இருந்து பல்வேறு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகை ராதிகாவின் அம்மாவை பற்றி அவதூறாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் திருவான்மியூர் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கும் போது, எதர்ச்சியாக அவரைப் பார்த்த ராதிகா கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
என் தாயைப் பற்றி எப்படி தவறாக பேசுவாய் என்று சண்டை ஆரம்பிக்க, பயில்வானும் எதிர்ப்பேச்சு பேச சண்டை பெரிதாகிவிட்டது. இதைத்தொடர்ந்து அங்கு உள்ளவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்கள். கடைசியாக நான் பேசியது தவறு என்றால் என் மீது வழக்கு போடுங்கள் நான் சந்திக்கிறேன் என பயில்வான் கூறிவிட்டு வந்துள்ளார்.
இது பெரிய சர்ச்சையாக கிளம்ப இதற்கு விளக்கம் அளித்த ராதிகா என் தாயைப் பற்றி அவதூறாக பேசியதற்காக அவரைக் கேள்வி கேட்டேன். மிகுந்த கோபத்தில் இருந்த நான் நாகரீகம் கருதி அடிக்காமல் அங்கிருந்து வந்து விட்டேன் என ராதிகா கூறியுள்ளார்.
கடற்கரையில் பயில்வனை ராதிகா திட்டிய பிறகும், திருவான்மியூர் கடற்கரையில் நடந்ததை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பயில்வான். கடற்கரையில் ராதிகா பயன்படுத்திய வார்த்தைகளை என்னால் வெளியில் கூற முடியாது. அவ்வளவு கடுமையான கேட்ட வார்த்தைகளால் பேசியுள்ளார். அவர் எப்படிப்பட்டவர் என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்பதில்லை.
நான் ராதிகா மற்றும் அவரது அம்மா பற்றி பொய்யாக எதுவும் சொல்லவில்லை. நான் நேரில் சந்தித்ததும், பத்திரிக்கை வாயிலாக நான் அறிந்ததை மட்டுமே எனது வீடியோக்களில் பேசி வருகிறேன். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் 60 சதவீத உண்மைகள் மட்டுமே சொல்லி உள்ளேன் இன்னும் சொல்ல எக்கச்சக்கமாக இருக்கிறது என பயில்வான் கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவால் ராதிகாவின் கடுமையான கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.