சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

என் பெயரை கெடுக்காத.. ஐஸ்வர்யாவை வெளுத்து வாங்கிய ரஜினிகாந்த்

நாளுக்கு நாள் ரஜினி குடும்பத்தில் பஞ்சாயத்துக்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. ரஜினியின் மகளான சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆக இருவருமே தற்போது விவாகரத்து சர்ச்சையில் சிக்கி விட்டனர். இதனால் ரஜினி மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார் என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரங்கள்.

ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு முன்னாள் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இதுவே ரஜினி தரப்பில் விசாரித்தபோது அவருக்கு பேரிடியாக அமைந்தது எனக் கூறினர்.

இருந்தாலும் மகள் திருமணம் வேண்டாம் என்று சொல்லாமல் இன்னொரு திருமணம் செய்து கொண்டது தனக்கு ஓகே தான் என மனதை தேற்றிக் கொண்டாராம். ஆனால் தற்போது மகளும் அதே நிலைமையில் வந்து நிற்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து பஞ்சாயத்து அதிகமாக பார்த்து அவருக்கு பிபி வந்தது தான் மிச்சம். நாளுக்கு நாள் அந்த செய்திகள் ரஜினியை பெரிய அளவில் பாதித்து வருவதாக கூறுகின்றனர்.

மேலும் தன்னுடைய மூத்த மகள் மீது ரஜினி பயங்கர கோபத்தில் இருப்பதாகவும் சமீபத்தில் அப்பாவை சமாதானம் செய்வதற்காக போன் செய்து ஐஸ்வர்யாவிடம் என் பெயரை கெடுக்க இன்னும் என்ன எல்லாம் செய்ய போகிறாய் என பயங்கர கோபத்தில் கத்தி விட்டு போனை கட் பண்ணி விட்டாராம்.

இதனால் ஐஸ்வர்யா செம அப்செட். இருந்தாலும் எப்படியாவது தன்னுடைய தந்தையை சமாதானம் செய்து விடலாம் ஆனால் கொஞ்சம் நாள் ஹைதராபாத்தில் இருந்து விட்டு அப்புறம் சென்று அவரிடம் விவரத்தை எடுத்துச் சொல்லலாம் என காத்துக் கொண்டிருக்கிறாராம்.

Trending News