ஒரு படம் ஆரம்பிக்கப்பட்டு அந்த வருடத்திற்கு உள்ளேயே ரிலீஸ் ஆனால் தயாரிப்பாளர் நினைத்த லாபத்தை பெற முடியும். தற்போது ஒரு படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு அன்பே தொடங்கப்பட்டு இன்னும் ரிலீசாகாமல் உள்ளது.
ஆனால் வழக்கமாக இது போன்று படங்கள் தள்ளிப்போனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை தர உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்துவாக்குல 2 காதல். இப்படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் காத்துவாக்குல 2 காதல் படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளது என படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார்.
இந்த படம் ஆரம்பிக்கும் போது விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரின் மார்க்கெட்டை விட தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இவர்கள் தமிழ் படங்கள் தாண்டி தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி உள்ளார்கள். இதனால் இவர்களுக்கு தற்போது டிமாண்ட் அதிகமாக உள்ளது.
இதனால் காத்துவாக்குல 2 காதல் படத்தின் இந்த தாமதம் தான் தயாரிப்பாளர் நினைத்ததை விட தற்போது பல மடங்கு லாபத்தை கொடுக்க உள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் ரேஞ்சும் தற்போது எங்கேயோ சென்றுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.