நீங்கெல்லாம் இனிமேல் இதுக்கு செட்டே ஆக மாட்டீங்க.. கலாய்த்த ரசிகரை பங்கம் செய்த குமுதா

தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவருடைய முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நந்திதா நடித்த குமுதா கதாபாத்திரம் இவரை மிகவும் பிரபலமாக்கியது.

அதன்பிறகு முண்டாசுப்பட்டி, எதிர்நீச்சல், புலி, தேவி 2, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல படங்களில் நந்திதா நடித்துள்ளார். நந்திதா நடித்த பெரும்பாலான படங்களில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். அதிகம் கவர்ச்சி காட்டாத இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள நந்திதா அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது உடல் எடை கூடி சற்று குண்டாக மாறிய நந்திதாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

நம்ம குமுதாவை இது என்றும் நந்திதா உடல் எடை கூடியதால் 80’s சென்றுவிட்டார் எனவும் அதனால் இனிமேல் ஹீரோயின் கதாபாத்திரத்தில் எல்லாம் நடிக்க முடியாது சைடு கேரக்டர்தான் நடிக்க முடியும் என கிண்டல் செய்கின்றனர்.

இதற்கு கோபப்பட்டு பதிலளித்த நந்திதா மற்றப் பெண்கள் போல் தான் நானும் ஒரு சாதாரண பெண். நான் ஒன்னும் கடவுள் இல்லை. எப்படி உங்களால இப்படி யோசிக்க முடியுது, இது மாதிரி வார்த்தைகளை பயன்படுத்த முடிகிறது. இது மாதிரி போன்றவர்களால்தான் நரகத்தில் உள்ளது போல் இருக்கிறது.

உடல் எடையால் நானும் கஷ்டப்படுகிறேன். ஆனால் இந்த தோற்றம் எனக்கு பிடித்திருக்கிறது, என் உடலை நான் நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ரத்தம் படத்தில் நந்திதா 3வது கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →