வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மார்க்கெட் இல்ல, பண்ணை வீட்டில் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகைகள்.. வடிவேலுவின் மறுபக்கம்!

தமிழ் சினிமாவில் தன்னுடைய காமெடி மற்றும் உடல்மொழியால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவருடைய காமெடியை பார்த்து சிரிக்காத நபர்களே இருக்க முடியாது. அதிலும்  குழந்தை ரசிகர்கள் இவருக்கு அதிகம்.

அப்படி நாம் சினிமாவில் பார்த்து ரசிக்கும் அவருக்கு இன்னொரு மறுபக்கமும் இருக்கிறது. அதாவது சினிமாவில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு இணையாக நடிகைகள் மெய்ண்டைன் செய்வதில் இவருக்கு இணை யாரும் இருக்க முடியாதாம்.

மேலும் அவருடைய ரசனையை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. வடிவேலு தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு சில கண்டிஷன் போட்டு தான் நடிக்க வைப்பாராம். இப்படி அவருடைய பல ரகசியங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

இவர் சினிமாவில் நடிகைகள், நடிகர்கள் என்று அனைவரின் பல அந்தரங்க விஷயங்களைப் பற்றியும் பொதுவெளியில் பேசி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதில் இவர் வடிவேலுவை பற்றி கூறிய பல விஷயங்களும் நமக்கு அதிர்ச்சிகரமாக இருக்கிறது.

அதன்படி வடிவேலு மார்க்கெட் இழந்த பல நடிகைகளுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்துள்ளார். அப்படி அவர் உதவி செய்யும் பொழுது பதிலுக்கு அவர் நடிகைகளிடம் இருந்து சில அட்ஜஸ்ட்மெண்ட்களை எதிர்பார்ப்பாராம்.

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக இருந்த சதா சில காலங்களில் சினிமாவை விட்டு காணாமல் போனார். அவர் மார்க்கெட் இழந்த சமயத்தில் தான் அவருக்கு வடிவேலுவின் எலி படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதற்காக அவருக்கு அதிக சம்பளமும் பேசப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த வடிவேலுவுடன் அவர் சில வருடங்கள் தொடர்பில் இருந்துள்ளார்.

அதையடுத்து இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி என்ற திரைப்படத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த போது அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மோனிகா. அவருக்கும் வாய்ப்பு கொடுத்தது வடிவேலுதான்.

இந்நிலையில் வடிவேலு தற்போது நடித்துக்கொண்டிருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் இளம் நடிகை பிரியா பவானிசங்கரை ஒப்பந்தம் செய்திருப்பதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அவர் தான் நடிக்க வேண்டும் என்று வடிவேலு மிகவும் உறுதியாக கூறி விட்டாராம். இதனால் அவருக்கு அதிகபட்ச சம்பளத்தை கொடுத்து படக்குழு புக் பண்ணி இருப்பதாக தெரிகிறது.

பொதுவாக வடிவேலு படப்பிடிப்பின்போது இரவு 8 மணி ஆகிவிட்டால் வடிவேலு யார் என்ன கூறினாலும் படத்தில் நடிக்க மாட்டாராம். தன்னுடன் நடிக்கும் சில நடிகைகளை காரில் ஏற்றிக்கொண்டு அவர் தன்னுடைய பண்ணை வீட்டுக்கு சென்று விடுவாராம். இது அங்கிருந்த மொத்த யூனிட்டுக்கும் தெரியுமாம். அதன்பிறகு அதிகாலை வரை அவர்கள் அங்கிருந்து வெளியே வரவே மாட்டார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

நாம் பார்த்து ரசித்த ஒரு மிகச்சிறந்த கலைஞனுக்கு பின்னால் இப்படி ஒரு மறு பக்கம் இருப்பது நம்ப முடியாமல் இருக்கிறது. இருப்பினும் சினிமாவில் இதெல்லாம் சகஜம் தான் என்று கடந்து போய்விட வேண்டியதுதான்.

Trending News