செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

இதை செய்தால்தான் பட வாய்ப்பு கிடைக்கும்.. அம்பலமான கோமாளி நடிகரின் காதல் லீலை

சினிமாவில் தன்னை கோமாளியாக காட்டிக் கொண்டு நம்மை ரசிக்க வைத்த அந்த நடிகருக்கு திரைக்குப் பின்னால் நாம் அறியாத வேறு ஒரு முகம் இருக்கிறது. ஏராளமான ரசிகர் கூட்டத்தை பெற்று சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் தான் அந்த நடிகர்.

படத்தில் இவர் ஒரு ஜோக்கராக இருந்தாலும் நிஜ வாழ்வில் ஒரு காதல் மன்னனாக இருந்துள்ளார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு நடிகையை சிபாரிசு செய்வாராம். அப்படி அவர் சிபாரிசு செய்யும் நடிகைகள், நடிகருடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

அதற்காக அந்த நடிகர் எல்லா படங்களிலும் அந்த நடிகைகளை நடிக்க வைக்க மாட்டார். ஒரு படத்தில் நடித்து விட்டால் அடுத்த படத்திற்கு வேறு நடிகையை பார்க்க கிளம்பி விடுவார் அந்த நடிகர். அப்படி அவருடன் நெருக்கம் காட்டி சினிமாவில் நடித்த கவர்ச்சி நடிகைகள் ஏராளம் உண்டு.

அந்த வரிசையில் வந்தவர் தான் அந்த கவர்ச்சி கதாநாயகி. சினிமாவில் அடுக்கு மொழி பேசும் அந்த இயக்குனரின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு கிடைத்தது என்னவோ கவர்ச்சியான வேடங்கள் தான். சில காலங்களில் அந்த வாய்ப்பும் அவருக்குக் கிடைக்காமல் போனது.

அந்த சமயத்தில் அவருக்கு கை கொடுத்த ஒருவர் தான் அந்த நடிகர். அவர்கள் இருவரும் இணைந்து சுந்தர இயக்குனரின் திரைப்படத்தில் நடித்தனர். அதில் நடிகை, நடிகருடன் மிகவும் நெருக்கமாக நடித்ததை பார்த்த பலரும் அதிசயித்தனர்.

சில காலங்கள் நடிகையுடன் நெருக்கமாக இருந்த அந்த நடிகர் அதன் பிறகு வேறு ஒரு நடிகை பக்கம் தாவி விட்டார். இப்படி நடிகைகளுடன் காதல் லீலை நடத்திய அந்த நடிகர் சிறிது காலம் கொஞ்சம் அடக்கி வாசித்தார். தற்போது மீண்டும் அவர் தன் லீலையை ஆரம்பித்துவிட்டதாக திரையுலகில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இந்த காமெடி பீசு வாழ்க்கையில் இன்னும் எத்தனை நடிகைகளோ?

Trending News