அஜித்தை பின்பற்றும் ஹெச் வினோத்.. இப்படியே போனால் வலிமை வலுவிழந்துவிடும்

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வலிமை படம் பான் இந்தியப் படமாக நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தற்போது பல திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக உள்ளது. இதனால் வலிமை படம் முதல் நாள் வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் வெளியீட்டுக்காக பல்வேறு வேலைகளில் மும்முரமாக உள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

அஜித் பெரும்பாலும் அவருடைய பட புரமோஷன்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். அதேபோல் தற்போது வலிமை படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் அவர்களும் வலிமை படத்தின் புரமோஷனுக்கு வருவதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டுகிறார்.

வலிமை படத்தின் புரமோஷனுக்காக போனிகபூர் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து வருகிறார். அவ்வாறு கடைசியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட ஹெச் வினோத் வர தயக்கம் காட்டி உள்ளார். அதன்பிறகு தயாரிப்பாளர் போனி கபூர் வற்புறுத்தியதால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வலிமை படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் படத்தின் புரமோஷனுக்கு கலந்து கொள்ள தயக்கம் காட்டுவது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. இப்படி முக்கியமானவர்களே படத்தை தாங்கி பிடிக்கவில்லை என்றால் வலிமை படம் வலுவிழந்துவிடும் என பலரும் கூறி வருகிறார்கள்.

இந்தப் படம் இன்று கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தற்போது வரை இந்த படத்தை பற்றி நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →