வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய 2ஆம் பாகம்.. அப்போதே உஷாராய் கணித்த செல்வராகவன்

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் கார்த்தி தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் அடுத்ததாக விருமன் படம் வெளியாக இருக்கிறது.

அதைத்தொடர்ந்து அவரின் சர்தார், பொன்னியின் செல்வன் என்று அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்காக வரிசை கட்டி நிற்கின்றன. இந்நிலையில் நடிகர் கார்த்தி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சினிமாவில் வித்தியாசமான கதைகளை எடுத்து அதில் வெற்றியும் கண்டவர் இயக்குனர் செல்வராகவன். ஆரம்ப காலத்தில் இவர் பல காதல் திரைப்படங்களை கொடுத்து வந்தார். அதையடுத்து அவர் வரலாற்று சரித்திர திரைப்படமான ஆயிரத்தில் ஒருவன் என்ற வெற்றி படத்தை கொடுத்து அனைவரையும் மிரள வைத்தார்.

கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடிப்பில் உருவான அந்த திரைப்படம் செல்வராகவன் இயக்கத்தில் மற்றொரு பரிமாணத்தை நமக்கு காட்டியது என்று தான் சொல்ல வேண்டும். அந்தப் படத்தின் முடிவில் அதன் இரண்டாம் பாகம் வருவது போன்று அவர் காட்டியிருப்பார்.

ஆனால் குறிப்பிட்ட படி அந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எந்த அறிவிப்பும் இன்று வரை வெளியாகவில்லை. ஆனாலும் விடாத அவருடைய ரசிகர்கள் இரண்டாம் பாகத்தை எப்போது எடுத்து முடிப்பீர்கள் என்று ஆர்ப்பரித்து வருகின்றனர்.

இதற்குத்தான் செல்வராகவன் உஷாராக முன்பே இதன் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டுக்குள் வரும் என்று கூறிவிட்டார். இப்பொழுது செல்வராகவன் டைரக்ஷன் செய்வதோடு நடிப்பிலும் பயங்கர பிஸியாகிவிட்டார். இவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்களும் தற்போது போட்டி போட்டு வருகின்றனர்.

இதனால் திட்டமிட்டபடி செல்வராகவன் அந்த படத்தை எடுத்து முடிப்பாரா என்பது சந்தேகமாகவே இருந்து வருகிறது. ஏனென்றால் அந்த படத்தை எடுத்து முடிப்பதற்கு நிச்சயம் அதிக காலதாமதம் ஆகிவிடும். இந்நிலையில் அவர் நடிப்பில் வேறு ஆர்வமாக இருக்கிறார். இதனால் அவருடைய ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை நினைத்து கவலையில் இருக்கின்றனர்.

Trending News