வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

அந்த நடிகையா வேண்டவே வேண்டாம்.. கறாராக சொன்ன பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் இப்போது அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு பிரபலமாக இருப்பவர் அந்த நடிகர். அவருக்கு அப்படி என்ன அதிர்ஷ்டமோ தெரியவில்லை நடிகர் கிடுகிடுவென புகழின் உச்சியில் இருக்கிறார்.

எவ்வளவு புகழ் இருக்கிறதோ அந்த அளவுக்கு நடிகருக்கு பிரச்சனைகளும் ஏராளம் இருக்கிறது. சின்னத்திரையில் இருந்து வந்த ஒருவர் இந்த அளவுக்கு பிரபலமாக இருப்பது மற்ற நடிகர்களுக்கும் சிறிது காண்டாகத் தான் இருக்கிறதாம். இப்படி நடிகரை சுற்றி எப்போதும் ஒரு பரபரப்பு செய்தி இருந்து கொண்டே இருக்கும்.

அந்த வரிசையில் நடிகரைப் பற்றி மற்றொரு செய்தி ஒன்று கசிந்திருக்கிறது. அது என்னவென்றால் நடிகர் ஆரம்பத்தில் நடித்த பொழுது அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் அந்த இளம் நாயகி. வாரிசு நடிகையான அவர் அந்த ஒரு படத்திலேயே மிகவும் பிரபலமானார்.

இதனால் அவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் படவாய்ப்புகள் குவிந்தது. அப்போது நடிகர் மிகவும் எதிர்பார்ப்போடு நடித்த திரைப்படத்தில் கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற தேடுதல் வேட்டை நடந்தது.

அதற்கு இயக்குனர், தயாரிப்பாளர் இருவரும் வாரிசு நடிகையை நடிக்க வைக்கலாம் என்று நடிகரிடம் கூறியிருக்கிறார்கள். அதற்கு அவரோ ஒருமுறை சேர்ந்து நடித்தவரோடு அடுத்த படத்தில் நடிக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டாராம்.

ஏனென்றால் கல்யாணம் ஆகி குடும்பம், குழந்தை என்று இருக்கும் நடிகரோடு அந்த நடிகையை சேர்த்து வைத்து கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது என்று அப்போது பத்திரிக்கைகளில் வந்த கிசுகிசு தான் காரணமாம். ஆனாலும் நடிகரை இயக்குனர் எப்படியோ சம்மதிக்க வைத்து படத்தில் நடிகையை கமிட் செய்து விட்டார்.

படம் வெளியான பிறகு அவர்களின் ஜோடிப் பொருத்தத்தை எல்லோரும் பாராட்டினார்கள். அதன் பிறகு நடிகர் நடித்த மற்றொரு திரைப்படத்திலும் அந்த வாரிசு நடிகை ஒரு கௌரவ வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News