வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

இயக்குனரின் முழு நேர குடி.. வழிமாறி பழைய காதலை தேடி சென்ற மனைவி

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து இன்று முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் அந்த இயக்குனர். அவரின் இயக்கத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பலரும் அவரை கண்டு பயந்து நடுங்குவார்கள்.

அந்த அளவுக்கு கோபக்கார இயக்குனர் அவர். படப்பிடிப்பு தளத்திலேயே அப்படி என்றால் சொந்த வீட்டில் சும்மாவா இருப்பார். இவரால் அவருடைய மனைவி பட்டபாடு கொஞ்ச நஞ்சம் கிடையாது. சில வருடங்களுக்கு முன் அந்த இயக்குனர் ஒரு அழகான பெண்ணை பார்த்து திருமணம் முடித்துக் கொண்டார்.

அவருடைய திருமணத்தை பார்த்த திரையுலகினர் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் ஆச்சரியப்பட்டு போனார்கள். ஏனென்றால் இயக்குநரின் மனைவி அவ்வளவு அழகாம். அவருக்கு இப்படி ஒரு மனைவியா என்ற ஆச்சரியம் தான் அது. ஒரு சிலர் அந்த பெண்ணை நினைத்து பரிதாபமும் பட்டனர்.

ஏனென்றால் இயக்குனரின் குணம் அப்படி. சதா சர்வ காலமும் குடி போதையில் இருப்பவர் அவர். திருமணத்திற்குப் பின்னர் அது அதிகமானதே தவிர கொஞ்சமும் குறையவில்லை. இருபத்தி நான்கு மணிநேரமும் குடிபோதையிலேயே மிதந்திருக்கிறார் அந்த இயக்குனர்.

அதுமட்டுமல்லாமல் கஞ்சா பழக்கம் வேறு இருந்திருக்கிறது. இதனால் அவர் இஷ்டப்பட்ட நேரத்துக்கு வீட்டுக்கு வருவது இல்லை என்றால் ஆபிஸிலேயே குடித்துவிட்டு கிடப்பது என்று பொழுதைக் கழித்திருக்கிறார். பொறுத்து பொறுத்து பார்த்த மனைவிக்கு அவரின் மீது வெறுப்பு வந்திருக்கிறது.

இதனால் இயக்குனரின் மனைவி தன்னுடைய பழைய காதலை தேடி போய் இருக்கிறார். இது என்ன புது கதையா இருக்கு என்று அனைவருக்கும் தோன்றலாம். உண்மையில் இயக்குநரின் மனைவி திருமணத்திற்கு முன் பிரபல கட்சியில் இருக்கும் பிரமுகரின் மகன் ஒருவரை உருகி உருகி காதலித்திருக்கிறார்.

ஆனால் அந்தக் காதல் கைகூடாமல் போகவே இயக்குனரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் அவரின் போதாத நேரம் கணவரின் நடவடிக்கை அவரை சலிப்படைய வைத்திருக்கிறது. இதனால் இயக்குநரின் மனைவி தன்னுடைய காதலனைத் தேடி சென்று பழைய காதலை வளர்த்திருக்கிறார்.

குடிபோதையில் இருந்த இயக்குனருக்கு சில நாட்களுக்கு பிறகுதான் இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே கோபக்காரரான அந்த இயக்குனர் மனைவியை சும்மா விடுவாரா என்ன. வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்திருக்கிறது. பிறகு ஒரு கட்டத்தில் இயக்குனர் மனைவியை பிரிய முடிவு செய்து தற்போது விவாகரத்தும் பெற்று விட்டார்.

இயக்குனரை பற்றி தெரிந்த பலரும் இந்த விவாகரத்து செய்தி நாங்கள் எதிர்பார்த்தது தான் என்று கேஷுவலாக கூறுகின்றனர். தற்போது இயக்குனரின் மனைவியைப் பற்றி தான் திரையுலகில் பேச்சாக கிடக்கிறது.

- Advertisement -spot_img

Trending News