தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை படத்தின் டைட்டில் மிக முக்கியமான ஒன்று. சிலர் டைட்டிலை வைத்தே படத்தின் மையக் கருத்தை கண்டுபிடித்துவிடுவார்கள். ஒரு சில நடிகர்கள் முந்தைய நடிகர்களின் வெற்றிப் படத்தின் டைட்டில்கள் தங்கள் படங்களில் வைத்துக் கொள்வார்கள். அதுவும் சில சமயங்களில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.
ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் அஜித் ரசிகர்களை தவிர மற்ற சினிமா ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வலிமை படம் சில இடங்களில் சற்று சரிவை சந்தித்தது. இதனால் வலிமை படம் விரைவில் ஒடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. வலிமை படத்திற்கு முதலில் வேறு ஒரு பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. அஜித் தன்னுடைய படங்களில் எப்போதும் வி சென்டிமென்ட் பார்ப்பார்.
அஜித்தின் முந்தைய படங்கள் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என வி சென்டிமெண்ட் படங்களாகவே வெளியானது. இதனால் வலிமை படத்திற்கும் வி யில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று அஜித் விடாப்பிடியாக இருந்துள்ளார். ஆரம்பத்தில் இப்படத்தின் டைட்டிலை பற்றி வினோத் மற்றும் போனிகபூர் இருவரும் பேசி உள்ளனர்.
இந்த படத்திற்கு முதலில் வைத்த பெயர் சாத்தானின் குழந்தை. இந்தப் பெயர் அவ்வளவாக நல்லா இல்லை என்று பெயரை மாற்றும்படி முதலில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்பின் அஜித்திற்கு ஏற்ற வி டைட்டிலில் வைக்கும்படி போனி கபூர் வினோத்திடம் கூறியுள்ளார். அதன்பிறகு இப்படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் ஹெச் வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் ஏகே 61 படம் உருவாகிறது. இப்படத்திற்காக ஹைதராபாத்தில் செட் அமைக்கும் வேலை நடந்து வருகிறது. ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலுக்கு அஜித் வி சென்டிமென்ட் பார்க்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.