வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய் செய்ய காத்திருக்கும் மெகா சாதனை.. ஆல் ஏரியாவில் தளபதிதான் கில்லி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார், இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் விஜய்க்கு துப்பாக்கி போல் ஆக்சன் சீக்வென்ஸ் படமாக அமையும் என்று கூறுகின்றனர்

இந்த திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான ‘அரபிக்குத்து’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று,சமூக வலைதளகளில் சாதனையும் படைத்தது . இந்தப்பாடல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

அதனை தொடர்ந்து அனிருத் இசையில், நடிகர் விஜய் பாடியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படம் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர்.

கடைசியாக வெளிவந்த புகைப்படத்தில்  நெல்சன் திலீப்குமாரும், தளபதி விஜய்யும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி இருக்கின்றனர். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இது தளபதி விஜயின் பீஸ்ட் பட கடைசி நாள் ஷூட்டிங் என்றும், இது ஒரு சிறப்பான தருணம் என்றும் பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான “சன் பிக்சர்ஸ்” கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் “சன் பிக்சர்ஸ்” தெரிவித்துள்ளது. 5 மொழிகளிலும் வசூல் சாதனையில் பிச்சு உதற போகிறார் தளபதி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Trending News