ஆஸ்கார் விழாவில் பொண்டாட்டிய தப்பா பேசிய பிரபலம்.. மேடையை அதிரவைத்த வில் ஸ்மித்

2022 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஏராளமான விருதுகளை பல திரைப்படங்கள் பெற்றது . அதிலும் முக்கியமாக டூன் என்ற அமெரிக்க திரைப்படம் 6 ஆஸ்கார் விருதுகளை பெற்றது.

பொதுவாகவே ஆஸ்கார் மேடையில் கைதட்டலும் பாராட்டும் கலந்திருக்கும் மிகவும் பிரம்மாண்டமான அறையில் நடைபெறும். ஆஸ்கார் விருதினை பல்வேறு உலக மக்கள் பல நாடுகளிலிருந்து ஆர்வமாக காண்பார்கள்.

தமக்கு விருப்பமான திரைப்படம் ஆஸ்கார் விருதினை தட்டிச் செல்வதை பார்த்து கர கோஷங்கள் எழுப்புவார்கள். அப்படிப்பட்ட அரங்கில் முதல் முறையாக அரை சத்தம் கேட்டுள்ளது. பிரபல நடிகரான வில் ஸ்மித் கிங் ரிசார்ட் என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

இந்த நிலையில் மேடையில் நகைச்சுவை நடிகரான கிறிஸ் ராக் வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா வில்ஸ்மித்தின் சிகை அலங்காரத்தை தவறாக சித்தரித்ததால் அவர் கோபப்பட்டு கிறிஸ் ராக்கை மேடையில் ஏறி பளார் என்று அறைந்தார்.

இதைக்கண்டு ஆஸ்கார் அரங்கமே ஒரு நொடியில் என்ன ஆனது என்று தெரியாமல் அதிர்ச்சியில் திகைத்துப் போயினர் . கிறிஸ் ராக்கிற்கும் என்ன செய்வது என்று தெரியாமல் பல்ல காட்டி சிரித்து சமாளித்தார். இந்த செயல் குறித்து வில் ஸ்மித் மன்னிப்பும் கோரியுள்ளார்.

wills-smith
wills-smith
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →