தமிழ் சினிமாவில் புதிய டிரென்ட் உருவாக்கி அஜித்.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சு

இந்திய சினிமாவிலேயே மிகவும் பிரபலமான நடிகர் தல அஜித்குமார். ஹீரோ மற்றும் ஆன்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து ட்ரெண்ட செட் பண்ணி ரசிகர்களுக்கு தன்னோட ஒவ்வொரு படத்திலும் டீரீட் கொடுத்துட்டு வராரு.

அப்படி தல அஜித் நடிச்ச 2007 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை நடித்த 14 படங்களில் 7 படங்களில் வில்லன்களை துரத்திற போலிஸாகவும் மத்த 7 படத்தில் அஜித் மற்றவர்களை துரத்துவது போலவும் நடிச்சிருக்காரு. அப்படிப்பட்ட திரைப்படங்களை தான் இப்ப நம்ம பார்க்க போறோம்.

2007ஆம் ஆண்டு வெளியான கிரீடம் திரைப்படத்தில் போலீஸ் ஆக வேண்டும் என்ற தன்னுடைய கனவுகளை நிறைவேற்ற ஆசைப்படும் இளைஞனா அஜித் நடிச்சிருப்பாரு. இதே வருடம் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான பில்லா திரைப்படத்தில் அஜித் போலிஸ் துரத்துற வில்லனா நடித்திருப்பார். இந்த திரைப்படம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படம்

2008ஆம் ஆண்டு இயக்குனர் ராஜூ சுந்தரம் இயக்கத்தில் வெளியான ஏகன் திரைப்படத்திலும் அஜித் போலீசா நடிச்சிருக்காரு.2010 ஆம் ஆண்டு வெளிவந்த அசல் திரைப்படத்தில் அஜித்குமார் ஒரு சிபிஐ ஆபீசராக நடித்திருப்பார்.

2011ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் அஜித் ஒரு ஆண்ட்டி ஹீரோவா நடிச்சிருக்காரு. சொல்லப்போனா கிட்டத்தட்ட வில்லனா விநாயக் கதாபாத்திரத்தில் நடிச்சி அசத்திருப்பாரு மங்காத்தா திரைப்படம் அந்த ஆண்டிற்கான பிளாக்பஸ்டர் திரைப்படமாக அறிவிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு பில்லா படத்தின் தொடர் கதையாக உருவாக்கப்பட்ட பில்லா 2 படத்திலும் அஜித் குமார் ஒரு கேங்ஸ்டர் நடித்திருப்பார். 2013 , 2015ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால், ஆரம்பம் போன்ற திரைப்படத்தில் அஜித்குமார் ஒரு போலீஸ் ஆஃபீசராக நடித்திருப்பார்.

2015 ஆம் ஆண்டு வெளிவந்த வேதாளம் திரைப்படத்தில் ஒரு பாசமான ரௌடி கதாபாத்திரத்தில் அண்ணன் தங்கை சென்டிமென்ட்டில் நடிச்சி அசத்திருப்பாரு. 2017 ஆம் ஆண்டு வெளியான விவேகம் திரைப்படத்திலும் கடைசியா ரொம்ப எதிர்பார்ப்போட ரெண்டு வருஷத்துக்கு அப்புறமா 2022 ஆம் ஆண்டு வெளியான வலிமை திரைப்படத்திலும் அஜித்குமார் போலீசார் நடிச்சிருக்காரு.

இப்பதாங்க தெரியுது தல அஜித்க்கு ஏன் இந்திய அளவில் இவ்வளவு ரசிகர்கள் இருக்காங்கன்னு, ஹீரோவா மட்டும் இல்லாம ஆன்டி ஹீரோவாக நடித்து பல பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்திருக்க ஒரே நடிகர் தல அஜித்குமார் தான்.