திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

காயப்பட்ட ரணம் இன்னும் ஆறல.. அதுக்குள்ள மறுமணத்துக்கு தயாரான பிரபலத்தின் மனைவி

இயக்கிய முதல் திரைப்படத்திலேயே பல விருதுகளை வாரி குவித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அந்த இயக்குனர். இவர் படத்தில் நடித்தாலே போதும் அதன் பிறகு அந்த நடிகர், நடிகைகளுக்கு திரையுலகில் ஏராளமான வாய்ப்புகள் குவியும்.

அப்படி இயக்குனரால் பிரபலமான பல நடிகர்களும் இன்று சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர். இந்நிலையில் இயக்குனரின் விவாகரத்து செய்தி சமீபத்தில் வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணக்கார வீட்டுப் பெண்ணை பெரியோர்கள் சம்மதத்துடன் மணமுடித்த இயக்குனரின் திருமண வாழ்வு கடந்த சில வருடங்களாக சரியில்லாமல் இருந்தது. அவர்களுக்குள் இப்படி ஒரு கருத்து வேறுபாடு யாருக்கும் தெரியாத நிலையில் தான் இவர்களின் விவாகரத்து செய்தி வெளியானது.

அதன்பிறகு இயக்குனரின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களும் அவரின் மனைவி குறித்த தகவல்களும் தற்போது வரை ஊடகங்களில் பரபரப்பை கிளப்பி வருகிறது. திருமணத்திற்கு முன்பே இயக்குனரின் மனைவி பிரபல அரசியல் கட்சி பிரமுகரின் மகனை காதலித்துள்ளார்.

இந்த காதல்தான் தற்போது இந்த விவாகரத்துக்கு காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குனரின் மனைவி தற்போது இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விவாகரத்து கிடைத்த சில வாரங்களிலேயே அடுத்த திருமணமா என்று பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

இது குறித்து இயக்குனரின் மனைவியிடம் கேட்டால் இவ்வளவு பெரிய பெண்ணை வைத்துக் கொண்டு நான் எப்படி திருமணம் செய்வேன். ஒரு திருமணத்தால் பட்ட பாடே போதும் இனி என் வாழ்வில் இன்னொரு திருமணத்துக்கு இடமில்லை என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.

Trending News