புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

6 மணி நேரமா பாலாஜியை கதறவிட்ட இடுப்பழகி ரம்யா.. பிக்பாஸில் நடந்த தரமான சம்பவம்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆனது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் போட்டிகளும் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பிக்பாஸ் ரசிகர்களும் தொடர்ந்து இந்நிகழ்ச்சி தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டியின்போது வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாதியிலிருந்து என்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஏனென்றால் நேற்று கொடுத்த டாஸ்க்கின் போது ஆறு மணி நேரம் பயில்வான் பாலாஜிக்கு ஈடுகொடுத்து சைக்கிளிங் செய்துள்ளார். இதனால் ரம்யா பாண்டியனுடன் பாலாஜி சரிக்கு சரி போட்டி போடும் நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே ரம்யா பாண்டியன் கலந்துகொண்ட பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் சிவானி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக எடை கொண்ட கயிற்றை இழுத்து பிடித்து சிங்க பெண்ணாகவே பிக்பாஸ் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள்.

அதேபோன்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியன் தன்னுடைய பிசிகல் டாஸ்கின் போது மற்ற போட்டியாளர்களை மிரள விடும் அளவுக்கு சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக சைக்கிளிங் செய்தது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் தன்னுடைய இடுப்பை காட்டி எக்கச்சக்கமான ரசிகர்களை வசியம் செய்திருக்கும் ரம்யா பாண்டியன், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் மேலும் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறார். ஆகையால் பிக்பாஸ் அல்டிமேட்டின் டைட்டில் வின்னர் ஆக பாலாஜி முருகதாஸ் மற்றும் ரம்யா பாண்டியன்  இருவரும் ஒருவராக தான் இருப்பார்கள் எனவும் பிக்பாஸ் ரசிகர்கள் கணிக்கின்றனர்.

Trending News