ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சாதனை மேல் சாதனை படைத்துவரும் பீஸ்ட்.. வலிமை, ஆர் ஆர் ஆர் பட ரெக்கார்டை உடைத்த தளபதி

நம் தமிழ் சினிமாவில் பொதுவாகவே இணையத்தில் வெளியிடப்படும் திரைப்படத்தின் அப்டேட்களுக்கு லைக்குகள், வியூஸ் அதிகமான வரவேற்ப்பை கொடுக்கும். அந்த பட்சத்தில் நடிகர் விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களின் திரைப்படங்களின் டிரைலர்கள் மற்றும் பாடல்கள் வியூஸ் மற்றும் லைக்குகளை அள்ளும். அதனை மதிப்பிட்டு டாப் 5 பட்டியல் வெளியிடப்படும்.

அந்த வரிசையில் தற்போது தென்னிந்திய சினிமாவின் டாப் 5 வில் இடம்பெற்ற திரைப்படங்களின் டிரெய்லர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலாவது இடத்தில் நடிகர் விஜய் படத்தின் ட்ரைலர் இடம்பெற்றுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகை பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது பிரத்யேக யூடியூப் சேனல் மூலமாக இணையத்தில் வெளியிடப்பட்டது.

பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே பல வியூஸ்களை  பெற்றது. யூடியூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருக்கும் பீஸ்ட் பட டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் 50 லட்சம் வியூஸ்களை தாண்டி உள்ளதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஹாஷ்டேக் வீரராகவன் ஸ்லேஸ் தி 5M+ வியூஸ் ஆன் டைம் என்று தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், யூடியூபில் அதிகமான லைக்குகளை பெற்ற தென்னிந்திய சினிமாவின் திரைப்படத்தில் முதலிடத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் இடம் பிடித்துள்ளது.  மேலும், நான்கு மணி நேரத்தில் 17 லட்சம் லைக்குகளை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தபடியாக பிகில் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

2019ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் 16 லட்சம் லைக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்தது. இந்த நிலையில் இந்த சாதனையை பீஸ்ட் திரைப்படம் முறியடித்துள்ளது. விஜயின் முந்தைய படத்தின் சாதனையை அவரின் திரைப்படமே முறியடித்துள்ளதை கண்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 மூன்றாவது இடத்தில் தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர் இடம் பெற்றுள்ளது. 13 லட்சம் லைக்குகளை நான்கு மணி நேரத்தில் வலிமை திரைப்படம் பெற்றது. 4வது இடத்தில் இயக்குனர் ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ட்ரெய்லர் இடம்பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நான்கு மணி நேரத்தில் 12 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. மீண்டும் 5 ஆவது இடத்தில் நடிகர் அஜித்தின் விசுவாசம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு அஜித்,  நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் 11 லட்சம் லைக்குகளை பெற்றது அந்த ஆண்டில் அதிக வாக்குகளை பெற்ற திரைப்படமாக விசுவாசம் திரைப்படம் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்தாம் இடத்திற்கு சென்றுள்ளது.

 

Trending News