முகமூடி போட்ட பீஸ்ட் பட வில்லன் இவர்தானா.. ஆஸ்கர் வாங்கிய படத்திலும் அசத்தியுள்ளாராம்

சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. பல சாதனைகள் புரிந்து வரும் பீஸ்ட் படத்தின் டிரைலருக்கு எதிர்மறையான விமர்சனங்களும் வருகிறது. இப்படம் யோகி பாபுவின் கூர்க்கா படத்தின் கதை தான் என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

மேலும், பீஸ்ட் படத்தில் மூன்று வில்லன்கள் என தகவல் வெளியாகி இருந்தது. இதனால் செல்வராகவன் முதல் வில்லனாக இருப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் ட்ரெய்லரில் ஹீரோவுக்கு பில்டப் கொடுப்பவராக மாற்றியிருந்தார் நெல்சன். இதனால் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் கிறிஸ்துமஸ் உடையணிந்து கொண்டு கொள்ளையர்கள் பெரிய மால் ஐ ஹைஜாக் செய்கின்றனர். அப்போது வீரராகவனாக விஜய் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். அப்போது முகமூடி அணிந்த ஒருவர் வருவார். அது யார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

அது வேறு யாரும் கிடையாது மலையாள நடிகரான சைன் டாம் சாக்கோ என்பவர் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது சைன் டாம் சாக்கோ என்பவர் தான் பீஸ்ட் படத்தின் முக்கிய வில்லன் என கூறப்படுகிறது.

ஆனால் விஜய் ரசிகர்கள் அன்கூர் விக்கல் தான் வில்லன் என கூறிவருகிறார்கள். அன்கூர் விக்கல் தனுஷின் மரியான், ஸ்லம் டாக் மில்லியனர் படத்திலும் நடித்துள்ளார். பீஸ்ட் படத்தில் அன்கூர் விக்கல், சைன் டாம் சாக்கோ என இரண்டு வில்லன்கள் யார் என்பது தெரிய வந்த நிலையில் மூன்றாவது வில்லன் யார் என்பது தற்போது வரை சஸ்பென்சாக உள்ளது.

இந்நிலையில் அது யாராக இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அடுத்த அடுத்த அப்டேட்க்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →