இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா.. ஹாலிவுட் பட கதையை காப்பியடித்த பீஸ்ட்

நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே அவர்களின் மிகவும் எதிர்பார்க்கபடும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் ஏப்ரல் 13, 2022 அன்று திரைகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் அதிரடி ட்ரைலரை படத்தின் தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 2’இல் வெளியிட்டனர்.இந்த டிரைலரை கண்ட ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விஜய் ஒரு மால் கடத்தப்பட்டபோது அங்கு இருந்த அதிகாரியாகத் தோன்றினார். அவர் சூழ்நிலையில் சிக்கிய பல அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதையும் முன்னிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார், மேலும் அவர் குண்டர்களைப் அடித்து துவம்சம் செய்கிறார். இந்த ட்ரைலரில் பல அதிரடி காட்சிகள் உள்ளன. இந்த ட்ரெய்லர் நான்கு மணி நேரத்தில் 7.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

தற்போது ஹாலிவுட்டில் 2009ஆம் ஆண்டு வெளியான மால் காப் எனும் திரைப்படத்தின் தழுவல் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். தமிழில் வெளியான கூர்கா திரைப்படத்தின் செயலிலும் படம் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் மற்ற படங்களின் சாயல் இருந்தாலும் படம் வெளி வந்த பிறகு தான் படம் எப்படி இருக்கிறது என கூற முடியும் என விஜய் ரசிகர்கள் பதில் கூறி வருகிறார்கள்.

மால் காப் படத்தில் ஒரு மாலின் செக்யூரிட்டி அதிகாரி அங்கு நடைபெறும் கொள்ளையில் இருந்து மக்களையும் உடைமைகளிலும் காப்பாற்றுகிறார் என்பதே கதைக்களம். இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து கடந்த 2015இல் மால் காப் திரைப்படத்தின் 2ஆம் பாகமும் வெளியானது.

இதையெல்லாம் பொறுப்படுத்தாமல் விஜய் ரசிகர்கள் படம் நன்றாகத்தான் இருக்கும் என கூறி வரும் 13 ஆம் தேதி  படத்தை வரவேற்க ஆயுத்தம் ஆகி வருகின்றனர். எந்தப் படத்தின் தழுவலாக இருந்தாலும், எங்க தளபதி படம் வந்தால் எப்பொழுதுமே திருவிழாதான் என்று ஆரவாரம் செய்து வருகின்றனர்.

அதே நாளில் யாஷ் நடித்த கே ஜி எஃப் படம் ரிலீசாகிறது. இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை பீஸ்ட் படம் தான் அதிக தியேட்டர்களில்  ரிலீசாகும் என்பதில் சந்தேகமில்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →