திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

உங்க வேலையை மட்டும் பாருங்க.. சிவகார்த்திகேயன் மீது கொலை வெறியில் சிம்பு

தற்போது ஊடகங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஞானவேல் ராஜாவைப் பற்றிய பிரச்சனை தான் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை தராததால் சிவகார்த்திகேயன் ஞானவேல் ராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடிக்கும் போது 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு தற்போது 4 கோடி ரூபாய் தரப்படவில்லை என்று சிவகார்த்திகேயன் சார்பாக கூறப்படுகிறது. அதற்கு ஞானவேல்ராஜா சிவகார்த்திகேயனால் படத்தில் ஏகப்பட்ட நஷ்டம் என்று பதில் மனு போட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ரஜினிமுருகன் திரைப்படத்தில் நடிக்கும் போது ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு பின்னர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியால் 15 கோடி ரூபாய் சம்பளம் பேசபட்டதாகவும், இந்தப் படத்தால் தனக்கு ஏற்பட்ட பெரிய நஷ்டத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று ஞானவேல்ராஜா கூறி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது சிம்பு சிவகார்த்திகேயன் மீது கடும் கொலைவெறியில் இருக்கிறார். ஏனென்றால் சிவகார்த்திகேயன் கொடுத்த மனுவில் ஞானவேல்ராஜா தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களுக்கு தடை கோர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

ஞானவேல்ராஜா தற்போது சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்துதலை திரைப்படத்தை தயாரித்து வருகிறார். திரையுலகில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்திருக்கும் சிம்பு தற்போது ஏராளமான திரைப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

அந்த திரைப்படங்களில் எல்லாம் கவனம் செலுத்தி வரும் சிம்பு பத்துதலை திரைப்படத்தையும் பெரிதும் நம்பி இருக்கிறார். ஆனால் அவரின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக சிவகார்த்திகேயன் இப்படி ஒரு வழக்குத் தொடர்ந்திருப்பது அவருக்கு ஆத்திரத்தைக் கிளப்பி உள்ளது.

இதனால் உங்களுக்குள் பிரச்சனை என்றால் அதை உங்கள் படத்தோடு வைத்துக் கொள்ளுங்கள். எதற்காக மற்றவர்களின் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சிம்பு, சிவகார்த்திகேயன் மீது கடும் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் எல்லாம் சிவகார்த்திகேயனை பற்றிதான் புலம்பி வருகிறாராம்.

Trending News