சினிமா செய்திகள்

ஆணவத்துடன் நடந்து கொண்ட நயன்தாரா.. உங்க கூட நடிக்க விருப்பம் இல்லை எனக் கூறிய பிரபல நடிகர்

By Arun · 08 ஏப் 2022
nayanthara

தற்போது நயன்தாரா பல படங்களில் நடித்து ஒரு பிஸியான நடிகையாக உள்ளார். இந்நிலையில் தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் என்ற இயக்குனர் எடுக்கும் புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். நயன்தாராவின் O2 படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் புரோடக்சன் இப்படத்தையும் தயாரிக்கிறது.

இப்படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரம் ஒன்று உள்ளது. அதில் விஜய் டிவியில் உள்ள முக்கிய பிரபலம் ஒருவரை அறிமுகப்படுத்த இயக்குனர் யுவராஜ் யோசித்து உள்ளார். ஆனால் அவருடன் நடிக்க நயன்தாரா தயாராக இல்லை என கூறிவிட்டார்.

பின்னர் ஹிந்தி மற்றும் மலையாள பட நடிகர் ரோஷன் மேத்யூ என்ற நடிகரை அழைத்து வாருங்கள், நடிக்க தயார் என நயன்தாரா கூறியுள்ளார். ரோஷன் மேத்யூ பிரித்திவிராஜ் இன் குருவி படத்தில் இப்ராஹிம் ஆக நடித்திருந்தார். தற்போது இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தில் நடித்துள்ளார்.

நயன்தாரா படத்தின் இயக்குனர் யுவராஜ் ரோஷன் மேத்யூவை தொடர்புகொண்டு கேட்கும்போது அவர் நயன்தாராவுடன் நடிக்க விருப்பம் இல்லை என கூறியுள்ளார். இதைக் கேட்ட நயன்தாரா உச்சக்கட்ட கோபத்தில் உள்ளாராம். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர் நயன்தாரா.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா நடித்துள்ளார். இதற்கு ஒருபடி மேலாக தற்போது லயன் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

ஆனால் ஒரு நடிகர் தற்போது நயன்தாராவுடன் நடிக்க விருப்பமில்லை என்று சொன்ன தகவல் நயன்தாராவுக்கு மட்டுமன்றி சினிமா வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் விஜய் டிவி பிரபலத்தை வேண்டாம் என்று சொன்ன நயன்தாராவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ரோஷன் மேத்யூ என கூறிவருகிறார்கள்.