திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற ஐட்டம் சாங் நடிகை.. இப்படி ஒரு நிலை எதிரிக்கும் வரக்கூடாது

தென்னிந்திய சினிமாவில் தனது கவர்ச்சி மூலம் பிரபலமானவர் அந்த நடிகை. இவர் ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் தான் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

இந்த நடிகை மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் நுழைந்தவர். ஆரம்பத்தில் ஸ்லிம்மாக இருந்த இவர் உடல் எடை கூடியதால் பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஐட்டம் சாங்குக்கு கூட ஆட தயாரான இந்த நடிகைக்கு படவாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போனது.

மேலும், வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையில் இறங்கினார். சுத்தத்திற்கு பேர்போன இந்த நடிகை தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளில் மட்டுமே இவரை காண முடிந்தது.

அதைப் பார்த்து அவரது ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர். அதன் பிறகு முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி விட்டார். இவரது உடல் எடை கூறியதற்கு தைராய்டு பிரச்சனை தான் காரணம் என கூறப்படுகிறது. இவர் உடல் எடையை குறைக்க பல முயற்சிகள் எடுத்தும் அதில் எந்த பயனும் இல்லை.

தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். இதனால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தனிமையிலேயே உள்ளார். இந்த நடிகைக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. இவருக்கு கருப்பையில் பிரச்சனை உள்ளதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தைராய்டால் அவதிப்பட்டு வரும் இந்த நடிகை தற்போது இந்த செய்தியை கேட்டு மனமுடைந்து போய் உள்ளார். இதனால் தற்கொலை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். பல ஆண் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா என அவரது ரசிகர்கள் வருந்துகின்றனர். இந்த செய்தியை பிரபல செய்தி தொடர்பாளர் பயில்வான் ரங்கநாதன் ஓபன்னாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Trending News