விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. இப்படத்தில் நெல்சன் இயக்கம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, விஜய் நடிப்பு, அனிருத் இசை என அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பல சாதனை படைத்து வருகிறது. பீஸ்ட் படக்குழு படத்தின் புரொமோஷன் வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது. பீஸ்ட் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் இப்போதே விஜய் ரசிகர்கள் விழாக்கோலம் கொண்டுள்ளனர்.
மேலும், பீஸ்ட் படத்திற்கு 800 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் நாளே வசூலை அள்ள வேண்டும் என தயாரிப்பாளர் பல யுத்திகளை கையாண்டு வருகிறார்கள். பீஸ்ட் படம் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சிகள் ஆரம்பிக்கப்படுகிறது.
அதிகாலைக் காட்சிகளுக்கு ஒரு டிக்கெட்டுக்கு 1500 ரூபாய் வசூலிக்கின்றனர். அதுமட்டுமின்றி தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு படி மேலே சென்று அவர்கள் நள்ளிரவு ஒரு மணிக்கு காட்சியை போடலாம் என்று திட்டம் போட்டு வருகின்றனர். அந்தக் காட்சிக்கு 2000 ரூபாய் வாங்கலாம் என்று ஒரு திட்டம் போட்டுள்ளனர்.
அந்த மீட்டிங்கில் கலந்து கொண்ட சில பேர் 2000 ரூபாய் என்பது மிக அதிகம் என கூறியுள்ளார்கள். அதற்கு சில தியேட்டர் உரிமையாளர்கள் சண்டைக்கு வந்துள்ளனர். நாம ஒன்னும் இல்லாதவங்க கிட்ட வாங்க போறது இல்ல, அவங்களா திரும்பி பாக்க வராங்க அதனால அந்த ஸ்பெஷல் காட்சிக்கு தான் வாங்குகிறோம்.
இதனால் அவர்களிடம் வசூலிப்பது பெரிய தப்பு ஏதும் இல்லை என தியேட்டர் உரிமையாளர்கள் காரார் காட்டி வருகிறார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் நள்ளிரவு காட்சியைப் பார்க்க தயாராகி வருகின்றனர். இதனால் எப்போதுமே விஜய்யின் படங்கள் வசூல் சாதனை படைக்கும் நிலையில் பீஸ்ட் படம் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.