செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025

பழையபடி முருங்க மரம் ஏறும் வேதாளம்.. மாறாமல் உச்சகட்ட ஆக்ரோஷத்தில் பாலா

பாலா என்றாலே ஒரு டெரர் தான். இவர் சூட்டிங் ஸ்பாட்டில் கொஞ்சம் கடினமாக நடந்து கொள்வார் என அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கும். உதாரணமாக நிறைய விஷயங்களை சொல்லி வருகின்றனர்.

இப்பொழுது மனுஷனுக்கு நாலாபக்கமும் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. சமீபத்தில் அவர் பர்சனல் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டு டைவர்ஸ் வரை சென்றது. அவருக்கு நிறைய பேர் அறிவுரை கூறினாலும் அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்து வருகிறார்.

இந்த விஷயங்களில் இருந்து மீண்டு வருவதற்கு ,அடுத்த படத்தை சீக்கிரமாக ஆரம்பித்து சிறிது மன ஓய்வு பெறலாம் என்று நினைத்தவருக்கு மீண்டும், மீண்டும் அவரது பழைய குணமே தலைதூக்குகிறது. அதாவது சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்படும் பிரச்சனைகளை பாலா சமாளிக்கமுடியாமல் உச்சகட்ட டென்ஷன் ஆகிறார்.

இப்பொழுது சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. அந்த சூட்டிங் பகுதியில் பாலா மிகவும் ஆக்ரோஷமாக காணப்படுகிறார் எதற்கெடுத்தாலும் யாரையாவது திட்டுவது என்றே இருக்கிறாராம்.

இதனால் இந்த படத்தில் பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. சூர்யா ஏற்கனவே பாலாவிடம் மூன்று மாதங்கள் தான் இந்த படத்திற்கான கால்ஷீட் என்று சொல்லி முடிவெடுத்துள்ளார். ஆனால் இவர் இவ்வாறு நடந்து கொள்வதால் படம் நிச்சயமாக நிறைய நாட்கள் இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு இடத்திலிருந்து பிரச்சனை என்றால் பரவாயில்லை, நாலாபக்கமும் பிரச்சனை வருவதால் சமாளிக்க முடியாமல் திணறுகிறார் பாலா. அந்த பிரச்சினைகளின் வெளிப்பாடே இப்படி அவரை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்குகிறது. அவருடைய பிரச்சினைகலிருந்து  விடுபட்டு பழைய நிலைக்கு வர, பாலாவின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Trending News