தளபதி 66 விஜய்க்கு அண்ணனாக நடிக்கும் பிரபல நடிகர்.. அப்ப அடி உதைக்கு பஞ்சமே இருக்காது

விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் தன்னுடைய கவனத்தை அடுத்த படமான தளபதி 66 பக்கம் திரும்பியுள்ளார். தமிழ் மற்றும் முதல் முறையாக நேரடி தெலுங்கு படமாக இது உருவாக உள்ளது.

தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. அப்போது இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றியும் தொழில்நுட்ப கலைஞர்களும் அறிவிக்கப்பட்டனர். குடும்ப பின்னணியில் உருவாகயிருக்கும் இந்த படத்தில் பூஜையின் போதே நடிகர் சரத்குமார் கலந்துக்கொண்டு அவர் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

தற்போது கூடுதல் தகவலாக படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜும் இணைந்துள்ளார். இருவரும் படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்கவுள்ளனர். முத்த அண்ணனாக சரத்குமாரும், இளைய அண்ணனாக பிரகாஷ் ராஜும் நடிக்கவுள்ளனர்.

தமிழில் 2000ஆம் தொடக்கத்தில் முன்னணியில் இருந்த சரத்குமார் பின்னர் துணைக் கதாப்பாத்திரங்களில் மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார். தற்போது விஜயுடன் முதல் முறையாக சேர்ந்து நடிக்கவுள்ளார். அதே போல பிரகாஷ் ராஜடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

விஜய்க்கு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் படத்தில் பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர்கள் அதிகமுள்ள இந்த படத்தில் சரத்குமாரும், பிரகாஷ் ராஜும் இணைந்துள்ளது, தமிழ் ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

வம்சி முதல் முறையாக விஜயுடன் இந்த படத்தில் கைகோர்க்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் தோழா என்ற படத்தை இயக்கியுள்ளார். தமன் இசையமைக்கவுள்ள இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தமிழில் வசனங்களை விவேக் எழுதியுள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →