ரஜினியை இடியாப்ப சிக்கலில் மாட்டிவிட்ட அனிருத்.. தலைவருக்கே ஸ்கெட்சா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கான இயக்குனர்களை தேர்வு செய்வதில் முழு முயற்சியில் உள்ளார். அதாவது ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

டாக்டர் படத்தை வைத்து இந்த வாய்ப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கொடுத்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தனர். இதனால் சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்த்க்கு பீஸ்ட் படத்தின் சிறப்பு காட்சியை போட்டு காண்பித்துள்ளனர். படத்தை பார்த்துவிட்டு ரஜினி மிகவும் அப்செட்டில் இருந்துள்ளார். அவரிடம் சென்று படம் எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு ‘இடைவெளியில் கொடுத்த ஐஸ்க்ரீம் நல்லா இருந்தது’ என்று நக்கலாக பதில் கூறி சென்றுவிட்டாராம்.

பின் தெளிவாக யோசித்து நெல்சன் அடுத்த படத்தை இயக்க வேண்டாம் என்பதை சன் பிக்சர்ஸ் இடம் தெரிவித்துவிட்டாராம். இதனால் சன் பிக்சர்ஸ் தற்போது அட்லி மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகிய 2 இயக்குனர்கள் கதைகளை கேட்டு யாராவது ஒருத்தரை தேர்வு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.

இப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் மாற்றுவதற்கு முக்கியமான காரணம் அனிருத் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. அதாவது ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யாவிடம் அனிருத் நெல்சனை பற்றி ஓதி உள்ளார். அதாவது நெல்சன் நெருங்கிய நண்பர் என்பதால் எப்படியாவது தலைவர் படத்தை இயக்கி விட வாய்ப்பு பெற்றுவிடலாம் என்று நினைத்துள்ளார்.

இதனால் அப்பாவிடம் சென்று இந்த விஷயத்தை ரஜினியின் மண்டையில் ஏற்றி விட்டனர். இப்படி தான் நெல்சனை ஒப்புக் கொண்டுள்ளார் ரஜினி, ஆனால் தற்போது பீஸ்ட் படத்தின் விமர்சனத்தை பார்த்துவிட்டு தலை கீழாக மாறி விட்டதாம். இவ்வளவு பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளார் ரஜினி இதற்கு முழு காரணம் அனிருத் என்கிறது சினிமா வட்டாரம், அடுத்த படத்திற்கான இயக்குனர் யார் என்பதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றது கோலிவுட் வட்டாரம்.

ரஜினியை பொருத்தவரையில் தோல்வி கண்ட இயக்குனர்களை கண்டுகொள்வதில்லை. அது யாராக இருந்தாலும் சரி, கே எஸ் ரவிக்குமார் ரஜினி கூட்டணி நிறைய வெற்றிப் படங்களை கொடுத்து இருக்கிறது. கடைசியாக லிங்கா என்ற படத்தின் மூலம் இன்றளவும் கேட்க மறுக்கிறார். இப்படி இருக்க நெல்சனின் தோல்வி படத்திற்கு பிறகு படம் பண்ணுவது கஷ்டம்.

சினிமா தொழிலை பொறுத்தவரையில் இன்று வரை ரஜினி மட்டுமே முடிவெடுத்து வந்த நிலையில். ரஜினியின் சினிமா வாழ்க்கையில் இயக்குனரை முடிவுசெய்து படம் ஆரம்பிக்கும் முன் மாற்றுவது இதுவே முதன்முறை. இதற்கு காரணம் தனது குடும்பம் குடும்பத்தினர் சினிமா வாழ்க்கையை தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயம் ரஜினியிடம் வந்துவிட்டது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →