தலைக்கேறிய ஈகோவால் என்ன செய்வதென்னு தெரியாமல் முழிக்கும் நெல்சன்.. நாலாபக்கமும் கிளம்பும் எதிர்ப்பு

தமிழ் சினிமாவில் இது வரை மூன்று படங்கள் இயக்கி உள்ளார் நெல்சன் திலீப் குமார், கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் போன்ற பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இதனால் விஜய்யை வைத்து பீஸ்ட் படம் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் அனைத்து விதமான ரசிகர்களையும் பூர்த்தி செய்யவில்லை.

இதற்கிடையே பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து ‘ரஜினி 169’ இயக்கும் வாய்ப்பும் நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்தது. பீஸ்ட் படத்தின் எதிர்மறை விமர்சனத்திற்கு பிறகு இப்பொழுது  ரஜினி இவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமா, வேண்டாமா என்று யோசிக்கிறார்.

அதுமட்டுமின்றி ‘ரஜினி 169’ படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும், ‘நீங்கள் வேறு ஒரு இயக்குனரை தேர்ந்தெடுங்கள்’ என்று ரஜினியிடம் சொல்லி வருகிறதாம்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய இடத்தில் நெல்சன் இருக்கிறார். ஆனால் அவரோ எந்த ஒரு அறிவிப்பையும் கொடுக்காமல் நேரம் கடத்தி வருகிறார்.

சும்மா ட்விட்டரில் அதை நீக்கவும், இதை நீக்கவும் என்று ரசிகர்களை குழப்பி வருகிறார். வெளிப்படையாக சொல்லாமல் அவருக்கு இருக்கும் ஈகோவை வெளிக்காட்டி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.