திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

உருகி உருகி காதலிக்கிறேன் என ஏமாற்றிய நடிகை.. துரோகத்தை மறக்காமல் திருப்பிக் கொடுத்த ஹீரோ

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக பாதிக்கப்பட்டவர்கள் தான் அவர்கள். அதே சேனலில் சீரியல்களில் நடித்ததன் மூலம் அந்த ரியாலிட்டி ஷோவுக்கு வந்த அந்த நடிகர் சக போட்டியாளரான அந்த செய்தி வாசிப்பாளரை உருகி உருகி காதலித்தார்.

விரைவில் இருவரும் வாழ்க்கையில் இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில் சினிமா வாய்ப்பு அவர்களைப் பிசியாகி விட்டது. மேலும் இந்த காதல் எல்லாம் பிரபலமாவதற்கு செய்த டிராமா தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

நடிகை அந்த ஷோவுக்காக காதலிப்பது போல் நடித்தாலும் நடிகரோ மிகவும் சின்சியராக காதலித்திருக்கிறார். இதனால் அவர் நடிகையின் இந்த துரோகத்தை தாங்க முடியாமல் தவித்திருக்கிறார். அவரின் நெருங்கிய நண்பர்களின் அறிவுரையால் அதிலிருந்து மீண்டு வந்துள்ள நடிகர் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகையாகிவிட்ட முன்னாள் காதலியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு நடிகருக்கு வந்துள்ளது. அவரோ அந்த துரோகத்தை மறக்காமல் வேறு நடிகையை புக் செய்யும்படி கூறி விட்டாராம். இது காதலிக்கு தெரியவந்து மிகவும் அப்செட் ஆகிவிட்டாராம்.

ஏனென்றால் நடிகை அறிமுகமான படம் அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை. மேலும் அவருக்கான வாய்ப்புகளும் சரிவர கிடைக்காத நிலையில் நடிகை தான் தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக நடிகருடன் படத்தில் இணைய வாய்ப்பு கேட்டிருக்கிறார். ரசிகர்கள் மனதில் சிறந்த ஜோடியாக இருந்தவர்கள் இணைந்து நடித்தால் படம் ஹிட்டாகி விடும் என்பதுதான் நடிகையின் பிளான்.

ஆனால் நடிகரோ முன்னாள் காதலியின் வலையில் சிக்காமல் நழுவி விட்டார். தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நடிகர் எக்காரணம் கொண்டும் காதலி நடிகையின் பக்கம் திரும்பக் கூடாது என்ற முடிவில் இருக்கிறார். நடிகரை கவிழ்க்க போட்ட அத்தனை திட்டமும் தற்போது வீணாகி போனதை நினைத்து நடிகை பயங்கர அதிர்ச்சியில் இருக்கிறாராம்.

Trending News