புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிரபலத்தின் வலையில் சிக்கிய இளம் நடிகை.. காதல் வசனம் பேசி கரெக்ட் பண்ணிட்டாரு

இளம் வயதிலேயே சினிமாவில் தன்னுடைய திறமையால் ஒரு நிலையான இடத்தை பிடித்தவர் அந்த இசையமைப்பாளர். தற்போது இவர் இசையமைக்காத திரைப்படங்களே கிடையாது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு பிஸியாக வலம் வரும் இவர் தற்போது உச்ச நடிகரின் படத்துக்கும் இசையமைக்க இருக்கிறார்.

இவ்வளவு பிஸியான வேலைகளுக்கு நடுவிலும் அவர் ஒரு இளம் நடிகையை காதல் வசனம் பேசி கவிழ்த்துள்ளார். மலையாள நடிகையான இவர் தமிழில் சூப்பர் நடிகரின் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவருக்கு மாஸ் நடிகருடன் ஜோடி போடும் வாய்ப்பும் கிடைத்தது.

அந்தப் படத்தின் போதுதான் இவருக்கும், அந்த இசையமைப்பாளருக்கும் இடையில் ஒரு நெருங்கிய நட்பு ஏற்பட்டதாம். அந்த நட்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது. தற்போது அவர்கள் இருவரும் மணிக்கணக்காக தொலைபேசியில் காதல் வசனம் பேசி ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார்களாம்.

ஏற்கனவே அந்த அந்தப் பிரபலம் வாரிசு நடிகை, பாடகி நடிகை போன்ற பலருடன் நெருக்கம் காட்டி வந்தார். அதிலும் வாரிசு நடிகையை தான் அவர் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்றும் பேசப்பட்டது. ஆனால் அதெல்லாம் ஒரு கட்டத்தில் பழைய கதையாக மாறிப்போனது.

அந்தப் பிரபலம் தற்போது மீண்டும் தன் காதல் லீலையை ஆரம்பித்துள்ளார். இந்தக் காதல் எது வரை செல்ல போகிறதோ என்று திரையுலகில் பலரும் இந்த ஜோடியை பற்றி கிசுகிசுத்து வருகின்றனர்.

Trending News