சிவகார்த்திகேயன் தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். டாக்டர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது இவரின் நடிப்பில் டான், அயலான் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்கு வரிசையில் நிற்கிறது.
மேலும் அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் எஸ்கே 20 திரைப்படமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் லைன் அப்பில் இருக்கும் அடுத்தடுத்த படங்களை நடிக்கும் முனைப்பில் இருக்கிறார். வரிசையாக சில தோல்விப் படங்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் பட வெற்றியை தக்கவைத்துக் கொண்டிருக்கும் முயற்சியில் இருக்கிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு கமல் ஒரு தூது விட்டு இருக்கிறார். ஏற்கனவே ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. இதுபற்றிய அறிவிப்பை கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
அதன் பிறகு சிவகார்த்திகேயன் கைவசம் இருக்கும் படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் இந்த படம் எப்போது ஆரம்பிக்கும் என்று தெரியாமல் இருந்தது. தற்போது அவர் எஸ்கே 20 படத்தை முடித்து விட்டதால் கமல் இந்த படத்தை இப்பொழுது முடித்துக் கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.
மேலும் இந்த படத்தை கமல் நிறைய சாட்டிலைட் உரிமையாளர்களிடம் பல கோடிக்கு விலை பேசி இருப்பதாக தெரிகிறது. அதனால் ராஜ்குமார் பெரியசாமி இயக்கயிருக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இவர் சிங்க பாதை என்ற படத்தை கமிட் செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில் கமலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிவா இந்த படத்தில் முதலில் நடிக்க வருவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.