சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

பட வாய்ப்புக்காக தூண்டில் போட்ட பிரியா பவானி சங்கர்.. வலையில் சிக்கிய 4 ஹீரோக்கள்

சின்னத்திரையின் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட ப்ரியா பவானி சங்கர் தற்போது பெரிய திரையில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவரின் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது இருக்கும் முன்னணி நடிகைகளை விட ப்ரியா பவானி சங்கருக்கு தான் அதிக படங்கள் கைவசம் இருக்கிறது. சக நடிகைகளே இவரைப் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு இருக்கிறது இவரின் அசுர வளர்ச்சி. ஆனால் இதற்குப் பின்னணியில் இவர் போட்ட பலே திட்டம்தான் தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இவர் ஒவ்வொரு படத்திலும் ஹீரோவை மாற்றுவது போன்று தனது காதலர்களை மாற்றி வருகிறார். இவருக்கு ஜோடியாக படத்தில் நடிக்கும் ஹீரோக்களுடன் படத்தில் வருவது போன்று உண்மையாகவே நெருங்கி பழகி வருகிறாராம். இதைப் பார்த்து லிஸ்ட் ரொம்பப் பெருசா இருக்கே என்கிறது கோலிவுட் வட்டாரம்.

லவ் பண்ணுவது போன்று நெருக்கமாக பழகி நடித்து வாய்ப்பை தட்டி தூக்குவதில் இவருக்கு சாமர்த்தியம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. அப்படி இவர் போட்ட தூண்டிலில் பிரபல ஹீரோக்கள் 4 பேர் சிக்கி இருக்கிறார்கள். அந்த ஹீரோக்களை பற்றிதான் தற்போது பலரும் சலசலத்து வருகின்றனர்.

அந்த வகையில் இவர் எஸ் ஜே சூர்யா, ஹரிஷ் கல்யாண், காமெடி நடிகர் சதீஷ் தற்போது வெளிவந்துள்ள ஹாஸ்டல் படத்தின் ஹீரோ அசோக் செல்வன் ஆகியோர் இடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்தாராம். அதன்மூலம் இவருக்கு படவாய்ப்புகளும் கிடைத்ததாக கூறப்படுகிறது.

ஹாஸ்டல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது இவருடைய கட்டாயத்தின் பேரில்தான் அசோக் செல்வன் அந்த படத்தில் நடிக்க சம்மதித்தாராம். ஏற்கனவே இவர் ஒருவரை பல வருடங்களாக காதலித்து வரும் நிலையில் தற்போது பட வாய்ப்புக்காக இவர் பண்ணும் இந்த விஷயம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending News