தீபாவளி ரேஸில் களமிறங்கும் 4 படங்கள்.. அஜித் விஜய்க்கு போட்டியாக நாங்களும் ரெடி

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு என்பதைத் தாண்டிலும் புது படங்களின் ரிலீஸ் தான் ரசிகர்களை அதிகம் கவருகிறது. அந்த வகையில் தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் மோதிக் கொள்ளும். பெரும்பாலும் விஜய், அஜித் படங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும்.

அந்த வகையில் இந்த வருடமும் விஜய், அஜித் படங்கள் ரிலீசாக காத்திருக்கிறது. அதாவது விஜயின் தளபதி 66 படமும், அஜித்தின் ஏகே 61 படமும் மோதிக்கொள்ள இருக்கின்றது. விஜயின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்த இரு நடிகர்களும் அடுத்த படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இதனால் இந்த வருட தீபாவளி விஜய், அஜித் என இரு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைய உள்ளது. மேலும் இந்த இரு நடிகர்களை தாண்டி இரண்டு இளம் நடிகர்களும் தங்களது படங்களை தீபாவளி ரிலீசுக்கு தயார் செய்து வருகின்றனர்.

அஜித் ஆவது, விஜய் ஆவது நாங்கல்லாம் இந்த ரேஸில் வருவோம் என இவர்களுக்குப் போட்டியாக அயலான் படத்தை இறக்குகிறார் சிவகார்த்திகேயன். இப்படம் ஏலியன்களை கதையாக வைத்து எடுக்கப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து நான் மட்டும் என்ன இளிச்சவாயனா என்று கார்த்தியும் இந்த ரேஸில் கலந்து கொள்கிறார். அதாவது தன்னுடைய சர்தார் படத்தை தீபாவளி ரிலீசுக்கு தயார் செய்கிறார் கார்த்தி. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விஜய், அஜித், சிவகார்த்திகேயன், கார்த்தி படங்கள் என இந்த வருட தீபாவளி பட்டையை கிளப்ப உள்ளது.

மேலும் இந்த தீபாவளி ரேஸில் முதலிடம் யாருக்கு, அடுத்தடுத்த இடங்கள் யாருக்கு என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக தீபாவளியை வீட்டிலேயே கொண்டாடி வந்த சினிமா ரசிகர்களுக்கு இந்த வருட தீபாவளி சரவெடியாக இருக்கப்போகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →