ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

மினிமம் பட்ஜெட்டில் அதிகமா கல்லா கட்டிய 8 படங்கள்.. பத்து மடங்கு லாபம் பார்த்த த்ரில்லர் படம்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் வசூலில் பல மடங்கு லாபம் பார்ப்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் சிறு பட்ஜெட்டில் படம் உருவாகி பல கோடிகள் லாபம் தருவது சினிமா வட்டாரத்தில் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு குறைவான தொகையில் எடுக்கப்பட்டு பல கோடி லாபம் தந்த 8 படங்களைப் பார்க்கலாம்.

ராட்சசன் : ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் 2018 திரில்லர் படமாக வெளியானது ராட்சசன். மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை கவர்ந்தது. அதாவது இப்படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 28 கோடி வசூலை ஈட்டியது.

கனா : அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2018 இல் வெளியான படம் கனா. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இப்படம் 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 22 கோடி வசூல் செய்தது.

சதுரங்க வேட்டை : ஹெச் வினோத் இயக்கத்தில் நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சதுரங்க வேட்டை. இப்படம் பணம்தான் எல்லாத்திற்கும் தீர்வு என நினைக்கும் ஒரு இளைஞனின் கதை. இப்படம் கிட்டத்தட்ட 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 25 கோடி வசூல் செய்தது.

தேசிங்கு ராஜா : எழில் இயக்கத்தில் விமல், பிந்து மாதவி, சூரி மற்றும் பலர் நடிப்பில் 2013ல் வெளியான திரைப்படம் தேசிங்கு ராஜா. இப்படத்தை மதன் தயாரித்திருந்தார். நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. மேலும் வசூலில் 30 கோடி லாபத்தை பெற்று தந்தது.

96 : பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் 2018 ல் வெளியான திரைப்படம் 96. இப்படத்திற்கு கோவிந்த மேனன் இசை அமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. 96 படம் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 80 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

டிமான்டி காலனி : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், ஷனத், அபிஷேக் ஜோசப் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இப்படம் ஹாரர் திரில்லர் படமாக வெளியானது. இப்படம் 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 20 கோடி வசூல் செய்தது. கிட்டத்தட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு இப்படம் 10 மடங்கு லாபத்தை பெற்றுத் தந்துள்ளது.

தனி ஒருவன் : மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்படம் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் 98 கோடி வசூலை ஈட்டி தந்தது.

கைதி : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, அஞ்சாதே நரேன் மற்றும் பலர் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. இப்படத்தின் மொத்த கதையும் ஒரு நாள் இரவு நடக்கும் சம்பவம் தான். இப்படம் 32 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 105 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

Trending News